கறுப்பி

ஜனவரி 21, 2005

Submission

Filed under: Uncategorized — suya @ 11:12 முப

34 வயதுடைய ஹர்சி அலி சோமாலியாவில் பிறந்து வளர்ந்த ஒரு முஸ்லீம் பெண்ணாக இருந்த போதும், தனது மத நம்பிக்கையைக் கைவிட்டவர்.

அகதியாக வந்து நெதர்லாந்தில் தஞ்சம் புகுந்து தற்போது நெதர்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர் எழுதிய திரைக்கதை “Submission” எனும் பெயரில் குறுந்திரைப்படமாக இயக்கனர் தியோ வான் கோவால் படமாக்கப் பட்டது. இக்குறுந்திரைப்படம் நெதர்லாந்துத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட போது அங்கு வாழும் இஸ்லாமிய மக்கள் கொதித்தெழுந்தார்கள். முக்கியமாக இஸ்லாமிய ஆண்கள். இஸ்லாமிய நாடுகளில் மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளில் வாழும் இஸ்லாமியப் பெண்களும் மதம் எனும் பெயரால் மிகவும் வன்முறையான வதைக்கு உள்ளாகின்றார்கள். அவற்றை வெளியே கொண்டு வருவதே தனது நோக்கம், இஸ்லாமிய மதத்தைத் சாடுவதில்லை என்று இவர் கூறுகின்றார். “Submission” குறுந்திரைப்படம் மூன்று பகுதியாக வெளிவந்திருக்கிறது.


முழு உடலையும் மறைக்கும், கண்கள் மட்டும் வெளியே தெரியும் வகையில் உடையணிந்த ஒரு பெண் தொழுகையை ஆரம்பிக்கின்றாள். அவளது மேலாடை மெதுவாகக் கண்ணாடி போலாகின்றது. அவளது மார்பிலும் வயிற்றிலும் குரானின் வரிகள் தெரிகின்றன.மணப்பெண் தோற்றத்தில் ஒரு பெண், அவள் முதுகுப் புறம் திறந்திருக்கிறது, அதிலும் குரான் வரிகள். இவ்வரிகள் ஒரு ஆண் தன் உடமையாக பெண்ணை அவன் விரும்பும் நேரத்தில், அவன் விரும்பும் இடத்தில், அவன் விரும்பும் விதத்தில் எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற இறைவனின் கட்டளை எழுத்தப்பட்டிருப்பதாக திரைப்பட விமர்சகர்கள் கூறுகின்றார்கள்.தரையில் காயப்பட்ட உடலோடு கிடக்கும் பெண்ணின் உடலில் தகாத உறவு கொண்டாலோ, அல்லது திருமணத்தை மீறிய உறவு கொண்டாலோ கிடைக்கும் தண்டனை இது என வரிகளால் எழுதப்பட்டிருக்கின்றன். இப்படியாக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களின் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகளை இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணே வெளியில் கொணர்வதால் நெதர்லாந் வாழ் இஸ்லாமிய மதவாதிகள் ஹர்சி அலியாவிற்கு தமது வழக்கப்படி மரணதண்டனை விதித்துள்ளார்கள். இதனால் நெதர்லாந்து அரசாங்கம் அவருக்கு 24 மணி நேரமும் ஆயுதந்தாங்கிய பாதுகாவலர்களைக் கொடுத்துள்ளது. இப்படத்தை இயக்கிய தியோ வான் கோ தனது பேட்டி ஒன்றில், இந்த அரசியலை எவரும் மறுக்க முடியாது இஸ்லாமியர்கள் கொதித்தெழுவது காரணமற்றது என்றும் கூறியுள்ளார் அதன் கடுமையான தாக்கத்தை உணராத தியோ வான் கோ கார்த்திகை மாதம் 2ம் திகதி 26வயது நிரம்பிய இஸ்லாமிய மத வாதியால் நெதர்லாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


இஸ்லாமிய மதவாதிகள் பெண்கள் நடாத்தும் வன்முறைகளைப், பெண்கள் அல்லாவிடம் முறையிடுவதாக அமைந்த இந்த “Submission” எனும் குறுந்திரைப்படம் எப்படி இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்பது புரியாமலேயே உள்ளது. இஸ்லாமிய ஆண் ஆதிக்கர்களுக்கு எதிரானதே இந்த “Submission”
எந்த மதத்திலும் நம்பிக்கையற்ற எனக்கு இப்படியான மதவாதிகளின் செயல் புரியாமலேயே இருக்கின்றது.
இக்குறுந்திரைப்படத்தை ifilm.com எனும் இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம் பார்க்க முடியும்.

Advertisements

1 பின்னூட்டம் »

  1. வணக்கம் சுமதி(???-http://www.thamilfilmclub.com/forum/viewtopic.php?p=359&sid=d6d4662ede6d50d195d669374706c8da#359) அவர்களே,தமிழ் வலைப்பதிவுலகிற்கு உங்களை வருக வருகவென வரவேற்கிறேன்.குறும்படங்கள் இலக்கியம் சம்பந்தமாக பற்றியும் உங்கள் கருத்துகளை நிறைய எதிர்பார்க்கிறேன்

    பின்னூட்டம் by ஈழநாதன்(Eelanathan) — ஜனவரி 26, 2005 @ 8:50 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: