கறுப்பி

பிப்ரவரி 18, 2005

Spring Summer Fall Winter…and Spring

Filed under: Uncategorized — suya @ 11:22 முப

South Korea/Germany


திரைப்படங்கள் பல வடிவங்களில் எடுக்கப்படுகின்றன. ஆனால் சில திரைப்படங்கள்தாம் இப்படியும் திரைப்படம் எடுக்க முடியும் என்ற வியப்பை எமக்குள் கொண்டு வருகின்றன. அந்த வகையில் வித்தியாசமாக நல்ல ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கு இத்திரைப்படத்தை பார்க்கும் படி நான் கூறுவேன். கழுத்தெலும்பு புடைக்க அடுக்கு மொழியில் வீர வசனம் பேசும் திரைப்படங்களில் இருந்து தற்போது மணிரத்னம் பாணி என்று கூறும் வகையில் திரைப்படங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. இத்திரைப்படம் இதையெல்லாம் தாண்டி வாழ்வியலை ஒன்றே முக்கால் மணிநேரத்திற்கு மிகக் குறைந்த (ஓரு பக்கம் இருக்கும் என்று எண்ணுகின்றேன்) திரைவசனங்களுடன் காட்சிக்கும் நடிப்பிற்கும் கதையின் கருவிற்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முறை என்னைத் திக்கு முக்காட வைத்தது.
நீண்ட கலைத்திரைப்படங்கள் சலிப்பைத் தருபவை என்ற கருத்தை இப்படம் உடைத்திருக்கின்றது.
நான்கு காலநிலைகளை ஒரே இடத்தில் மையமாக்கி காலநிலை மாற்றத்தோடு காலத்தையும் ஓட வைத்து பௌத்தத்தையும் தியானத்தையும் முன்நிலைப்படுத்தி வாழ்வியல் தத்துவங்களை மிக அழகாகக் படப்பிடிப்புக்குள் அடக்கி ஒரு பெரிய வாழ்வியல் தத்துவத்தையே தந்திருக்கின்றார் இயக்குனர்.

ஒரு பௌத்த “மொங்” கையும் அவரது சிஷ்யனான ஒரு சிறுவனையும் வைத்துத் திரைப்படம் ஆரம்பமாகின்றது. விளையாட்டாக மீன் ஓணான் பாம்பு போன்றவற்ரை பிடித்து சிறுவன் அவற்றில் முதுகில் ஒரு சிறிய கல்லைக் கட்டி விட்டு அவை நகரமுடியாமல் தவிப்பதைப் பார்த்துச் சிரித்து மகிழுவதைக் கண்ட குரு அவன் இரவு நித்திரைக்குப் போன பின்னர் அவன் முதுகில் ஒரு கல்லைக் கட்டி விடுகின்றார். அவன் காலை எழுந்த போது போய், அந்த உயிரனங்களைத் தேடிப்பிடித்து அவன்றில் முதுகில் கட்டியதை அவிழ்த்து விடு அப்போதுதான் உன் முதுகில் இருக்கும் கல்லை நான் அகற்றுவேன் என்பதோடு, அவற்றில் எதுவாவது இறந்திருந்தால் இந்தக் கல்லின் பாரம் நீ இறக்கும் வரை உன் இதயத்தில் கனக்கப் போகிறது என்று கூறகின்றார்.
இயற்கையோடு இணைந்து புறச் சு10ழலின் தாக்கமற்று வாழப்பழகிக் கொண்ட சிறுவன் காலமாற்றத்தோடு இளைஞனாகி அங்கே வைத்தியத்திற்காக வந்த ஒரு இளம் பெண்ணோடு உறவு கொண்டு காமத்திற்கு அடிமையாகி அவள் பின்னால் போய் விடுகின்றான். அதன் பின்னால அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று படம் தொடருகின்றது. புத்தரின் கொள்கைப்படி காமத்தை நிராகரிப்பதாகத் திரைப்படம் அமைந்தது எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும். புறகாரணிகளால் மனிதன் எப்படியெல்லாம் மாறிப் போகின்றான் என்பதை மிகவும் யதார்த்தமாகக் காட்டியிருக்கிறது திரைப்படம். முக்கியமாகத் தியானத்தை வலியுறுத்துகின்றது.

Advertisements

6 பின்னூட்டங்கள் »

 1. Thanks for thr post.

  பின்னூட்டம் by Thangamani — பிப்ரவரி 18, 2005 @ 12:19 பிப

 2. This post has been removed by a blog administrator.

  பின்னூட்டம் by Thangamani — பிப்ரவரி 18, 2005 @ 12:19 பிப

 3. You better watch this movie.. Its a good one.

  பின்னூட்டம் by கறுப்பி — பிப்ரவரி 18, 2005 @ 12:29 பிப

 4. ஆமாம், பார்ப்பேன்.

  பின்னூட்டம் by Thangamani — பிப்ரவரி 18, 2005 @ 3:06 பிப

 5. கறுப்பி,
  தங்கள் வருகைக்கு நன்றி.
  உங்கள் விமர்சனம் படித்தேன். நன்றாக இருந்தது.
  எல்லா பதிவுகளிலும் நிறைய படங்களையும் போட்டு கலக்குகிறீர்கள்!
  -ஜீவா

  பின்னூட்டம் by ஜீவா(Jeeva) — மார்ச் 31, 2005 @ 4:48 பிப

 6. பரவாயில்லை.. இப்பவாவது உங்கட பார்வை பட்டதே நன்றி..

  பின்னூட்டம் by கறுப்பி — ஏப்ரல் 1, 2005 @ 12:57 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: