கறுப்பி

பிப்ரவரி 23, 2005

புலிநகக்கொன்றை 2.

Filed under: Uncategorized — suya @ 1:20 பிப

அரசியல் –

19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கொம்யூனிஸத்தின் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து மாக்ஸ்சை மனப்பாடம் செய்து “தோழர்” என்று சிவப்புக் கனவோடு திரிந்த பாட்டாளிகள் வர்க்கம் அதிகம். என் நண்பனோடான ஒரு வாதத்தின் போது அவன் சொன்னான். எந்த ஒரு கொள்கையும் உழைக்கும் வர்க்கத்தைப் போய்ச் சேர வேண்டுமெனின் நாஸ்திகம் கதைத்தால் நடக்கப் போவதில்லை. மதத்தின் மூலம் எடுத்துச் செல்வது மிக இலகு. மக்களின் நலனுக்காக உண்மையாக உழைக்க நினைத்த எவரும் இதனைச் செய்யவில்லை. அதுதான் எல்லாமே தோல்வியில் போய் முடிகிறது என்று. (Max Weber ன் “ The protestant Ethics and the Sprit of Socialism” னைத் தட்டிப்பார்க்கையில் அவரின் “Calvanism” (பிரெஞ்சுப் புரட்டஸ்தாந்துப் போதகர் பின் பற்றிய போதனைகள்) கொள்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

ஒரு போராட்டம் வெற்றிபெற வேண்டுமெனின் போராளிகளும் பொதுமக்களும் அழிவது தவிர்க்க முடியாதது என்பது போராட்டக்காறர்களின் வாதம். அதே போல் ஒரு கொள்கை வெற்றி பெற (கொம்யூனிஸ்ட்) உழைக்கும் வர்க்கத்தில் பல தெருவிற்கு வரவேண்டும்.
இது கொள்கையாளர்களின் வாதமாக இருக்கலாம்.

கண்ணன் அரசியல் கூட்டம் ஒன்றிற்காக மதுரை ரயில் நிலையத்தில் நின்றபோது சந்தித்த வடை வியாபாரியுடனான உரையாடலில் –

“நீங்க எந்தக் கட்சி?”
(கண்ணனுக்கு உழைக்கும் மக்களின் அருகில் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களோடு ஒன்றாக உணர வேண்டும் என்ற ஆசை. இவர் உழைக்கும் வர்க்கத்தில் வருவாரா? அல்லது லும்பன் ரகமா? மார்க்ஸ் ரயில் நிலையத்தில் வடை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை).
வடை விற்பவனுக்கு “வாயைப் பொத்திக்கிட்டு போடா பாப்பாரப்பயலே” என்று சொல்ல ஆசை
“அந்த வல்லார ஓளிகளைப் பற்றி ஏன் கேக்கிறீங்க? எல்லாரும் திருடனுக மேக வேட்டைச் சாமானுங்க. இரண்டனா தேவடியா கூடப் பக்கத்தில வர யோசிப்பா”
“எல்லாரையுமா மோசமென்றீங்கள? சில நல்ல ஏழைகளைப் பத்தி யோசிக்கிற கட்சிகளுமிருக்கு. கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக்குங்க”
“கம்யூனிஸ்ட்டா? உள்ளதுக்குள்ளேயே நாறி வீச்சமடிக்கிற பயலுக அவனுக. மில்லில என்பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்த என்னை இந்தக் கண்டாரப் பயலுக சத்தம் போட்டு முதலாளிப்பயலுகளின்ர மயித்தப் பிடுங்கறன் எண்டாங்க நாங்களும் மில்லே எங்கட கைக்கு வரபோறதா நினைச்சுக் கனவு கண்டம். ஆனால் கடைசியா இவங்கள நம்பினதுக்கு வடை வித்துக்கிட்டுத் திரியன் என்னைப் பாத்தா பரம்பரையா வடை விற்கிறவன் மாதிரியா தெரியுது” (சுருக்கப்பட்டுள்ளது)

கொள்கையாளர்களும் அமைப்பாளர்களும் தடம் புரளும் போது பொதுமக்களிடையே நம்பிக்கையின்மை குடி புகுந்து விடுகின்றது. இதைத் தான் எனது நண்பன் பாதிக்கப்பட்ட எவருக்கும் ஒரு கொள்கையை ஒரு மாற்றுக் கருத்தை எடுத்துச் செல்லும் போது மதரீதியா எடுத்துச் செல்ல வேண்டும் என்றானோ தெரியவில்லை. மதம் தலைப் போடும் போது பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கையின்மை அதிகம் இருக்காது என்பது அவன் வாதம். (எனக்கு இதில் உடன்பாடு இல்லை)

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: