கறுப்பி

மார்ச் 3, 2005

“Bend it like Beckham”

Filed under: Uncategorized — suya @ 8:00 முப

Cultural conflict இனாலும் Generation Gap இனாலும் பாதிக்கப்படும் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டத்தை மையமாக வைத்துப் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அவற்றுள் அதிகம் பேசப்பட்ட திரைப்படம் ““My big fat Greek wedding”. அதே போல் இந்திய மக்களைத் தளமாக வைத்து வெளிவந்த திரைப்படங்களுள் எனக்குப் பிடித்தது “Bend it like Beckham“. இதன் மூலக்கதை எல்லா நாட்டுப் புலம்பெயர்ந்த மக்களுக்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதால் நகைச்சுவை உணர்வோடு இக்கரு பல இயக்குனர்களால் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றது. முக்கியமாக இங்கிலாந்தில் இந்தியர் பாக்கிஸ்தானியர் இக்கருவை மையமாக வைத்துப் பல திரைப்படங்களைத் தந்துள்ளார்கள். “East is East” “My Son the Fanatic” போன்றவை குறிப்பிடத்தக்கவை. தீபா மேத்தாவின் “Bollywood Hollywood “ கூட இப்படியான ஒரு திரைப்படம்தான். ஆனால் அதில் மிகுந்த செயற்கைத்தனம் இருந்தது.

“Bend it like Beckham” கலாச்சார முரண்பாடு, சந்ததி இடைவெளி போன்றவற்றோடு பேச்சுத் திருமணம், கலப்புத் திருமணம், பெண்ணியம், ஓரினச்சேர்க்கை என்று பலவற்றையும் மேலோட்டமாக அலசி வருகின்றது. இருந்தும் இத்திரைப்படத்தில் முக்கியமாக பெண்ணால் எதையும் செய்ய முடியும் என்றும், கலாச்சாரம் ஒருவரின் முக்கியமாகப் பெண்களின் விருப்பத்திற்கு மாறா நிற்கக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றது.

பேச்சுத் திருமணத்தை விரும்பும் ஒரு இந்தியக் குடும்பம் எப்படித் தனது மகளின் உதைபந்தாட்டத் துறையையும் கலப்புத் திருமணத்தையும் ஏற்றுக் கொள்கின்றது என்பதை மிகுந்த நகைச்சுவை உணர்வோடு படமாக்கியிருக்கின்றார் இயக்குனர் Gurinder Chadha.
Beckham போல் தானும் ஒரு உதை பந்தாட்ட வீராங்கனையாக வர வேண்டும் என்ற கனவில் பெற்றோருக்குத் தெரியாமல் ஜஸ்மிண்டர் பூங்காக்களில் உதைபந்தாட்டம் விளையாட அவளின் திறமையைக் கண்டு தமது அணியில் சேர்த்துக் கொள்கிறது ஒரு உதைபந்தாட்ட அணி. அதன் பின்னர் ஜஸ்மிண்டர் எதிர்கொள்ளும் பிரச்சகைள் நகைச்சுவையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றது. ஜஸ்மிண்டரின் திறமையால் உதைபந்தாட்ட அணி வெற்றி கொள்வதும் ஜஸ்மிண்டர் தனது Coach க் காதலிப்பதும் என்று நாம் எதிர்பார்க்கும் திரைப்பட Formula வைத்தான் “Bend it like Beckham” உம் கொண்டுள்ளது. ஜஸ்மிண்டர் இங்கிலாந்தில் வாழும் இந்தியப் பெண். மிகவும் நன்றாக அவருக்கு நடிப்பு வருகின்றது.

Gurinder Chadha தீவிர திரைப்பட இயக்குனர் இல்லை என்பது முன்பே தெரிந்ததால் அதனை எதிர்பார்க்காமல் சென்று பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமாக இருந்திக்காது. Gurinder Chadha ஐஸ்வர்யா ராயை வைத்து இயக்கியிருக்கும் “Bride and Prejudice” கூட முற்றுமுழுதான பொழுது போக்கிற்கான அழகியல் திரைப்படமாகத்தான் இருக்கப் போகின்றது. இருந்தும் மனதைக் குளிர்மையாக்க திரையரங்கிற்கு சென்று பார்க்கவுள்ளேன்.

Advertisements

11 பின்னூட்டங்கள் »

 1. /ஜஸ்மிண்டர் இங்கிலாந்தில் வாழும் இந்தியப் பெண். மிகவும் நன்றாக அவருக்கு நடிப்பு வருகின்றது. /
  அவர் இப்போது கலிபோர்னியாவிலே; NBC இன் ஏற் தொடரிலே வைத்தியராக நடிக்கின்றார்.

  பின்னூட்டம் by -/பெயரிலி. — மார்ச் 3, 2005 @ 9:44 முப

 2. அவர் இப்போது கலிபோர்னியாவிலே; NBC இன் ER தொடரிலே வைத்தியராக நடிக்கின்றார்.

  பின்னூட்டம் by -/பெயரிலி. — மார்ச் 3, 2005 @ 9:45 முப

 3. have you seen Gurinder Chadda’s

  ‘What’s Cooking?’

  பின்னூட்டம் by Mathy Kandasamy — மார்ச் 3, 2005 @ 10:57 முப

 4. No Mathy? Is it good?

  பின்னூட்டம் by கறுப்பி — மார்ச் 3, 2005 @ 11:10 முப

 5. i love it. it is so much better than bend it like beckam. i like Bend it like beckam. but ‘what’s cooking?’ talks abt so many things.

  it happens during thanksgiving. in L.A. 4 families from differents parts of the world. thw trials and tribulations and the interactions.

  just lovely!

  பின்னூட்டம் by மதி கந்தசாமி (Mathy) — மார்ச் 3, 2005 @ 11:28 முப

 6. yes Mathy I will try to get this weekend

  பின்னூட்டம் by கறுப்பி — மார்ச் 3, 2005 @ 11:59 முப

 7. ஜாலியான படம்… அதே படத்தில் நடித்த கீரா நைட்லி (Keira Knightley)சரசரவென்று ஹாலிவுட்டில் வளர்ந்துவிட்டதைக் கவனித்தீர்களா?

  பின்னூட்டம் by சன்னாசி — மார்ச் 3, 2005 @ 12:34 பிப

 8. ஆமாம் மண்டரீஸர் அவரின் வேறு படங்களை நான் பார்க்கவில்லை பார்த்தீர்களா? “Pirates of the Caribbean: The Curse of the Black Pearl” நான் கேள்விப்பட்டதோடு சரி.

  பின்னூட்டம் by கறுப்பி — மார்ச் 3, 2005 @ 12:44 பிப

 9. Bollywood Hollywood எனக்கு மிகவும் ரசித்திருந்தது. சப்-டைட்டில் போட்டு கிண்டல் செய்த விதத்தில் ஆரம்பித்து அனைத்து காட்சிகளிலும் ஹிந்தி (தமிழும் கூடத்தான்) படங்களை நன்றாகவே நக்கல் அடித்திருந்தார்கள்.

  பெண்ட் இட் லைக் பெக்கமில் (நீங்கள் ‘மேலோட்டமாக’ என்று குறிப்பிட்டவாறு) தற்பாலார் நாட்டம் எல்லாம் தேவையே இல்லாமல் திணிக்கப் பட்டது போலும் இருந்தது.

  பின்னூட்டம் by Boston Bala — மார்ச் 3, 2005 @ 2:04 பிப

 10. You can watch Revathy’s “Mitr My Friend” @ http://www.lankasri.com. Do anyone know where I can watch “American Chai” online?

  பின்னூட்டம் by ???????? — ஜூன் 24, 2005 @ 12:59 பிப

 11. மாறுபட்ட கலாசாரத்தின் விளைவில் நமது குழந்தைகள் பாதிக்கப்படுவோர்களோ என்ற பெற்றோர்களின் அச்ச உணர்வையும், தன் மகள் காயம் பட்டுவிடக்கூடாது என்ற பாதுகாப்பு உணர்வயும் நன்றாக வெளிப்படுத்தியிருந்தார்கள். எனக்கு பிடித்திருந்தது.

  பின்னூட்டம் by ???? ???? — ஜூன் 25, 2005 @ 11:55 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: