கறுப்பி

மார்ச் 23, 2005

Bride and Prejudice

Filed under: Uncategorized — suya @ 11:51 முப


Jane Austen இன் நாவலான Pride and Prejudice ஐத் தழுவி Bride and Prejudice எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு சிறந்த இயக்குனராக இருந்தாலும் ஒரு முன்னணி நடிகையையோ, நடிகைரையோ திரைப்படத்தில் நடிக்க வைக்கும் போது திரைக்கதையை அவர்களுக்குச் சார்பாக மாற்றி அமைத்துவிடுகின்றார்கள். அந்தத் தவறைச் செய்ய Gurinder Chadha வும் மறக்கவில்லை. உலக அழகியும் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தனது படத்தில் நடிக்கின்றார் என்றவுடன் அழகிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துத் ஒரு அழகாக நகைச்சுவை கலந்த திரைப்படத்தைத் தந்திருக்கின்றார். Pride and Prejudice பார்க்கும் போது ஏற்பட்ட எந்தவித மனத்தாக்கமும் Bride and Prejudice ஐப் பார்க்கும் போது ஏற்படவில்லை. இந்தியாவிலும்,இங்கிலாந்திலும்,அமெரிக்காவிலும் என்று அழகாகப் பெண்களை முக்கியமாக ராயை அலையவிட்டிருக்கின்றார். மசாலா இந்தியத் திரைப்படத்தின் போமுலாவில் சில பாடல் காட்சிகளும்,ஒரு சண்டையும்,கொஞ்சம் கொமெடியும் என்று போர் அடிக்காத திரைப்படம. பொப்கோனைக் கொறித்தபடியே ஒரு நாள் பொழுதைப் போக்கலாம்.

அடுத்தடுத்து நான்கு பெண்களைப் பெற்றுவிட்டு அவர்களுக்கு தான் நினைத்தபடி சீதணம் கொடுத்து பெரிய இடத்தில் கலியாணம் கட்டி வைக்க முடியாமல் போய் விடும் என்று பயந்து வெளிநாட்டிலிருந்து வரும் இளைஞர்களின் பார்வையில் தனது மகள்களை நிறுத்தி வைக்கும் தாயின் கரெக்டர் நகைச்சுவையாக இல்லை.. பாத்துப் பாத்து அலுத்து விட்ட விடையம் குமட்டிக்கொண்டுதான் வருகின்றது.

சும்மா சாட்டுப் போல் சில இடங்களில் சிந்திக்கத் தெரிந்த பெண்ணாக ராயைச் சித்தரித்து அவரை விட்டு மேல்மட்ட அமெரிக்கர்களை ஏளனம் செய்வது, இந்தியாவின் சிறப்பை எடுத்துரைப்பது போன்று காட்சிகள் யதார்த்தமாக இல்லை. ராயை அழகு பொம்மையாய் சித்தரிப்பதைத் தான் அழகாகச் செய்துள்ளார்கள். பிரமாண்டமான பட நிறுவனங்களின் பண உதவியுடன் எடுக்கப்பட்ட Bride and Prejudice வசு10லில் வெற்றியைத் தந்ததா தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை முற்றமுழுதான ஒரு தோல்விப்படம். கலர் பாக்க விரும்புவோர் பாக்கலாம்.

Advertisements

2 பின்னூட்டங்கள் »

  1. //கலர் பாக்க விரும்புவோர் பாக்கலாம். //

    கறுப்பி,
    இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.. உங்கள் கடைசிவரியைப் பார்த்தபின் பார்க்கலாம்போல்தான் தோன்றுகிறது :-).

    பின்னூட்டம் by Muthu — மார்ச் 23, 2005 @ 6:32 பிப

  2. Pride and Prejudice பார்த்தீர்களா? பார்க்காவிட்டால் பார்த்துவிட்டுப் இந்தப் படத்தைப் பாருங்கள் அப்போது புரியும் நான் கூறியது.

    பின்னூட்டம் by கறுப்பி — மார்ச் 24, 2005 @ 5:59 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: