கறுப்பி

மார்ச் 26, 2005

வேண்டுகோள்

Filed under: Uncategorized — suya @ 7:44 முப

வலைப்பதிவில் தளம் வைத்திருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். நான் தளம் தொடங்கிய காலம் தொடக்கம் எனது எழுத்தைப் பதிவைத் தனிப்பட்ட முறையில் தாக்கி “நீ எழுதாதே” என்பதாய் அனாமதேயமாகவும் வேறு பெயர்களிலும் ஒருவர் வந்து என் தளத்தில் பின்னூட்டம் இட்டபடியே இருக்கின்றார். வௌவேறு பெயர்களில் வரும் (அனைத்துப் பெயர்களுக்கும்) அவருக்குச் சொந்தமாகத் தளம் இல்லை. மின்அஞ்சலும் போலியானது. எனது படைப்புகளுக்கான விமர்சனம் இல்லை அது. ஒருவரை “உனக்கு ஒன்றும் தெரியாது நீ எழுதாதே” என்று சொல்வதற்கு ஒருவருக்கும் தகுதியில்லை. இருப்பதாய் நினைத்தால் அது என் தவறு அல்ல. அப்படியா பின்னூட்டத்தை இடுபவர் யார் என்று எனக்குத் தெரியும் ஆனால் இது வலைப்பதிவு என்னால் நிரூபிக்க முடியாது. முடிந்தவரை நானும் சொல்லியாகி விட்டது. ஆனால் அவர் விடுவதாய் இல்லை. தனது தளத்தை அழகாக நேர்த்தியாக வைத்துக் கொண்டு என் தளத்தில் இப்படியாகச் சிறுபிள்ளைத் தனமாகத் தொடர்ந்து எழுதி வருவதை என்னால் தடுக்க முடியாது எமது படைப்புக்கள் பின்னூட்டங்கள் பற்றி வாதிடுவது கருத்து மோதல்கள் செய்பவது என்பது எல்லோராலும் வரவேற்கப்படுவதொன்று நான் ரோசாவசந்த, மாலன், மாண்ரீஸர், முத்து, டி.சே, நாயணன், பெயரிலி, வசந்தன், வெங்கட், இப்படி சிலருடனும் எனது கருத்துப் பற்றி மோதியிருக்கின்றேன். அவர்கள் நேர்மையாகத் தளம் வைத்திருக்கும் எழுத்தாளர்கள்.
எனவே தளம் வைத்திருக்கம் 400 மேற்பட்ட வாசகர்களிடமும் நான் கேட்டுக்கொள்வது தயவுசெய்து அனாமதேயமாகவோ, இல்லாவிட்டால் போலியான பெயர்களிலோ வந்து என் தளத்தில் பின்னூட்டம் இடவேண்டாம். மீறி இட்டால் நான் அதை நீக்கி விடுவேன். இது எனக்கு மிகவும் அரிண்டமாக இருக்கிறது. இதைத் தவிர என்னால் ஒன்றும் செய்ய முடியாது. கிழமை நாட்களில் வேலைத் தளத்தில் கிடைக்கும் சில பொழுதுகளில் மட்டுமே நான் எழுதுவதுண்டு என்னால் முழுநேரமாக மின்கணணி முன்னால் இருந்து யார் தனிப்பட்ட முறையில் தாக்குகின்றார்கள் என்று பார்வையிட்டுக் கொண்டிருக்க முடியாது. சில வேளைகளில் எனது நண்பர்கள் பார்வையிட்டு விட்டு மீண்டும் எழுதியிருக்கின்றார்கள் என்று எனக்குத் தொலைபேசியில் அழைத்துச் சொல்லும் போது மட்டுமே எனக்குத் தெரிகிறது. ஏன் இப்படிக் கீழ்த்தரமாக நடக்கின்றார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. தயவுசெய்து எனது வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவும்

Advertisements

9 பின்னூட்டங்கள் »

 1. அன்புள்ள கறுப்பி.
  இதற்கு இலகுவான வழியுண்டு. ஒரு சைற் மீற்றரைப்போடுங்கள். அதில் அந்த நபரின் ஐபியை பார்க்கலாம். அந்த ஐபியை தடையும் செய்யலாம்.

  பின்னூட்டம் by கயல்விழி — மார்ச் 26, 2005 @ 8:29 முப

 2. thanks I will try. but do you think its gona make any differece?

  பின்னூட்டம் by கறுப்பி — மார்ச் 26, 2005 @ 8:34 முப

 3. மன்மதனில் இருந்து பிரச்சனை இருப்பதை “நான்” அறிகிறேன். இப்படி ஆயிரம் பேர் இருப்பார்கள். இதுக்கெல்லாம் விளக்கம் குடுத்துக்கொண்டு இருந்தால்; எப்படி? நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள்!

  பின்னூட்டம் by எல்லாளன் — மார்ச் 26, 2005 @ 11:20 முப

 4. நிச்சயமாய் ஏதாவது செய்யலாம், மாற்றம் கூட வரும். இந்த முகவரிகளில் முயன்று பாருங்கள். கூகிலில் அடித்துவிட்டால் வரும் என்ன செய்யலாம் எப்படிச்செய்யலாம் என்று.

  http://www.urgentclick.com/ip-blocker.html

  http://fantomaster.com/fablockfrog0.html

  பின்னூட்டம் by கயல்விழி — மார்ச் 26, 2005 @ 12:36 பிப

 5. கறுப்பி நீங்கள் தான்யாவின் அனுமதியுடன் பிரதீபா உங்களுக்கு எழுதியிருந்த பதிலை அழித்துவிட்டீர்கள்.அதிலே பிரதீபா தனது தரப்பை எடுத்து விளக்கியிருந்தார்.அதுவும் மொட்டையாக இல்லை தான் எங்கிருக்கிறேன் ஏன் தான்யாவின் பதிவை உபயோகித்துப் பின்னூட்டமிடுகிறேன் என்ற விளக்கத்துடன்.அதை நீங்கள் அழித்த வேகத்தைப் பார்க்கும் போது அதில் உண்மை இல்லாமலில்லை என்று தோன்றுகிறது.ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?

  பின்னூட்டம் by ஈழநாதன்(Eelanathan) — மார்ச் 26, 2005 @ 8:18 பிப

 6. கறுப்பி,
  இப்பதிவு இங்கு தொடர்புடையதாய் இருக்கலாம்
  http://muthukmuthu.blogspot.com/2003_12_01_muthukmuthu_archive.html#107150330931523922
  விரும்பினால் , நெட்ஸ்டேட் பேசிக், எக்ஸ்ட்ரீம் டிராக் பொன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் யார் எங்கே இருந்து பதிகிறார்கள் என்று அறியமுடியும். வலைப்பதிவர்கள் பலர் இதனைப் பயன்படுத்துகிறர்கள்.
  எனது பதிவிலும் இது இருக்கிறது. இது யார் எங்கிருந்து பார்க்கிறார்கள் என்பதற்கு மட்டுமல்லாமல் எத்தனை பேர் வலைப்பதிவுக்கு வருகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவும் கொஞ்சம் உதவியாக இருக்கும். ஏனென்றால் வரும் அனைவரும் பின்னூட்டம் பதிவதில்லை. அதனால் எத்தனை பேர் வருகிறார்கள், படிக்கிறார்கள் என்று தெரிய நமக்குக் கொஞ்சம் உதவியாய் இருக்கும். உதாரணமாய் நான் எனது இணைப்புக்கள்.
  http://www.nedstatbasic.net/stats?ACw5hgYIh+ETBJmkg2cblACrdmdw
  http://extremetracking.com/open?login=muthuk

  பின்னூட்டம் by Muthu — மார்ச் 26, 2005 @ 8:24 பிப

 7. முத்து நன்றி பலர் பல தகவல்களைத் தந்திருக்கின்றீர்கள் அனைவருக்கும் நன்றி.

  எல்லாளன் பிரச்சனை மன்மதனில் இருந்து ஆரம்பமாகவில்லை நான் தளம் தொடங்கி எனது முதல் இரண்டு பதிவுகளின் போதே ஆரம்பித்து விட்டது. அப்போதே எனக்கு அவர்கள் யார் என்று தெரிந்ததால் தயவுசெய்து பின்னூட்டம் இடவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொண்டு அவர்கள் பின்னூட்டத்தை நீக்கியும் விட்டேன்.

  மேலும் ஈழநாதன் என் தளம் படைப்புகளும் பாதிப்புகளும் என்ற பதிவைத்தான் கொண்டிருக்கின்றது. அங்கு வந்து அதற்கு ஒவ்வாத கருத்து தனிப்பட்ட தாக்கல் கொண்டவையாக இருப்பதை விட்டு வைக்க நான் விரும்பில்லை. சில காலங்களின் பின்னர் வந்து வாசிப்பவர்களுக்கு அது சினத்தைத்தான் தரும். எனது தளத்தில் எனது படைப்புக்களுக்காக வரும் எந்த ஒரு பின்னூட்டத்தையும் நான் நீக்க விரும்பவில்லை. ஆனால் தனிப்பட்ட தாக்குதல்களையோ என் சந்தேகத்தின்கான அவரின் விளக்கத்தையோ விட்டு வைக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. புரிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். (தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்கு வந்தால்தான் புரியும்) பிரதீபா எதற்காகத் தான்யாவின் தளத்தை உபயோகப்படுத்துகின்றார் என்பது எனக்குப் புரியவில்லை. பேசாமல் தனது தளமாக பெட்டைக்குப் பட்டவையை உபயோகப் படுத்திப் பதிலைப் போட்டிருந்தால் அதில் ஒரு நேர்மை இருந்திருக்கும் என்பது என் கருத்து. இனிமேல் இது பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. எனக்குத் தளத்தில் தனிப்பட்ட முறையில் தளமற்று வந்து தாக்குவதற்கான விரோதிகள் எவரும் கிடையாது. புலகால கருத்து முரண்பாடுகளால் பேசாமல் விட்டு விட்ட பிரதீபா சகோதரிகளைத் தவிர. இனியும் தொடர்ந்து தளமற்றோர் பின்னூட்டம் இடும் பட்சத்தில் அதை நான் பார்க்கும் போது நீக்கி விடுவேன். தயவுசெய்து ஏன் நீக்கினேன் என்று ஒருவரும் கேட்காதீர்கள். அது தனிப்பட்ட முறைத் தாக்குதல் என்பதை தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
  நன்றி அனைவருக்கும்

  பின்னூட்டம் by கறுப்பி — மார்ச் 27, 2005 @ 3:18 பிப

 8. This post has been removed by the author.

  பின்னூட்டம் by ஒரு பொடிச்சி — மார்ச் 27, 2005 @ 10:11 பிப

 9. This post has been removed by a blog administrator.

  பின்னூட்டம் by ஒரு பொடிச்சி — மார்ச் 27, 2005 @ 10:15 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: