கறுப்பி

மார்ச் 28, 2005

மீள்வாசிப்பு…

Filed under: Uncategorized — suya @ 8:43 முப

நான் ஒரு பெண். அதற்காக நான் பெருமைப் படுகின்றேன். எனக்கு வயது 50. 22ம் வயதில் திருமணம் செய்து, 23ல் தாயாகி, எனது 43ம் வயதில் 22 வயது யுவதிக்கு என் கணவரை விட்டுக் கொடுத்தவள். நான் ஒரு பெண். நான் சுயத்தோடு சுகமாக பெருமையாக இருக்கின்றேன். மாதவிடாய் சிக்கல்கள் இப்போது எனக்கு இல்லை. மாதவிடாயோடு என் சிக்கல்கள் எல்லாம் களையப்பட்டு விட்டன. இப்போது எனக்கு 50 வயது. ஆண்களால் மட்டும் பார்வையிடப்பட்டு வாசிக்கப்பட்ட என் உடலை நான் மீளப் பார்க்கின்றேன். மறுவாசிப்பிற்கு உட்படுத்துகின்றேன். என் உடல் எனக்குப் பெருமை தருகின்றது. தாய்மையின் அடையாளமாக பால் புகட்டிய என் முலைகள் சுருங்கித் தொங்குகின்றன. குழந்தை சுமந்த வயிறு பருத்து நெகிழ்ந்து அசைகின்றது. சுருங்கிய தோலோடு பிதுங்கும் தொடைகளும், தசைகளும் என் உடைகளுக்குள் புக மறுக்கின்றன. நான் என் உடலை மறுவாசிப்புச் செய்கின்றேன். நான் ஒரு பெண் அதற்காக நான் பெருமைப்படுகின்றேன். பெண் என்பதாய் சுயபரிதவிப்பு என்னிடத்தில் இல்லை.. நிறைவாக என் வாழ்வின் முன்நகர்தல் இடம்பெறுகின்றது. இனியும் நான் நகர்வேன் நிராகரிப்புகளற்று..

மனச்சாட்சி –

நீ எட்டு வயதில் கொடிய ஒரு மிருகத்தினால் வன்புணர்ச்சிக்கு ஆளாகி சத்தமில்லாது உன் உடலை வெறுத்து ஒதுக்கி ஓங்கி அழுதிருக்கின்றாய். 18 வயதில் முதல்காதலால் கருச்சிதைவு செய்து மீண்டும் உன் உடல் அதற்கான உணர்வுகளை வெறுத்திருக்கின்றாய். திருமணம் என்ற பெயரில் தினம் தினம கணவனால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி வந்த உன் உடல் மீண்டும் உனக்கு எதிரியாகியிருக்கின்றது. சுருங்கி விழும் உன் முலைகளும், பருத்த வயிறும், நெகிழும் தசைகளும்,தொடைகளும் கேலிக்குள்ளாகியிருக்கின்றன. மாதவிடாய் நின்றபோது உன் உணர்வுகளும் மரித்துவிட்டதாய் தீர்ப்பாக பெண்மையை இழந்து விட்டதாகப் பரிதவித்திருக்கின்றாய். உன் உடலை வெறும் இறைச்சித் துண்டாகவும், இரத்தமாகவும் நீ பார்த்த நாட்கள் எனக்கு மீண்டும் நினைவிற்கு வருகின்றது. உன் உடலை அல்ல உன் மனதை மீண்டும் ஒருமுறை மீள்வாசிப்புச் செய்.

Advertisements

3 பின்னூட்டங்கள் »

 1. குறிப்பு – என்ன எழுதியிருக்கின்றேன் என்று பலர் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். கொஞ்சம் தறவான அர்த்தத்தைத் தருவதாகவும் தெரிவித்திருந்தார்கள். எழுதும் போது குறிப்பை இணைக்கத் தவறி விட்டேன் தற்போது இணைத்துக் கொள்கின்றேன்.

  2006 ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி மேடை ஏற இருக்கும் மூன்று நாடகங்களின் ஒன்றான “மீள்வாசிப்பு” என்ற நாடகப்பிரதியில் இருந்து ஒரு பகுதி. இது ஒரு வெள்ளை இனப் பெண்மணியின் வாழ்க்கை அனுபவத்தைத் தழுவிய கதை.

  பின்னூட்டம் by கறுப்பி — மார்ச் 30, 2005 @ 6:30 முப

 2. கிட்டத்தட்ட கடந்த ஐந்து மாதங்களாக அவஸ்தையில் இருந்திருக்கிறேன். எதேச்சையாக இப்போதுதான் நீங்கள் முதலிலேயே கொடுக்கத் தவறிய குறிப்பை படித்தேன். மனம் அமைதியடைந்தது. அது வரை இது ஏதோ உங்களுக்கு நிஜமாகவே உண்டான பாதிப்பு என்றே என் மனதில் பதிந்திருக்கிறது.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  பின்னூட்டம் by dondu(#4800161) — ஜூலை 14, 2005 @ 7:45 முப

 3. Thanks Dondu. take care.

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 14, 2005 @ 7:51 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: