கறுப்பி

மார்ச் 30, 2005

புரிய முனைதல்

Filed under: Uncategorized — suya @ 1:18 பிப

மூர்க்கமாய் திணிக்கப்பட்ட
நம்பிக்கைகளுடன்
சுருண்டு கிடந்த எனை
சிறகு விரித்து புள்ளினமாக்கி விட்டீர்கள்.

தேடலை தூண்டி விட்டு
வினாக்களை விழுங்கி
அராஜகத்தின் நிழலையும்
நிராகரிக்க கற்றுத் தந்தீர்கள்.

குனிந்த தலையை
நிமிர வைத்துப் பாராட்டி
ஆழ்கடலின் மௌனத்திற்கு இழுத்துச் சென்று
பேசவும் கற்றுத் தந்தீர்கள்

பரந்து!
விரித்த சிறகுடன்
மேலே பறந்து தூரமாய் மறைந்து
புள்ளியைக் காண முனைகையில்
மீண்டும் இழுத்து வந்து
மாராப்பு விலகுது
இழுத்து மூடு என்று
மூளியாக்கி
சிறகைத்
கத்தரிக்கின்றீர்கள்.

Advertisements

3 பின்னூட்டங்கள் »

  1. மூர்க்கமாய் திணிக்கப்பட்ட நம்பிக்கைகளுடன் சுருண்டு கிடந்த எனை சிறகு விரித்து புள்ளினமாக்கி விட்டீர்கள். தேடலை தூண்டி விட்டு வினாக்களை விழுங்கி அராஜகத்தின் நிழலையும் நிராகரிக்க கற்றுத் தந்தீர்கள். குனிந்த தலையை நிமிர வைத்துப் பாராட்டி ஆழ்கடலின் மௌனத்திற்கு இழுத்துச் சென்று பேசவும் கற்றுத் தந்தீர்கள் பரந்து விரித்த சிறகுடன் மேலே பறந்து தூரமாய் மறைந்து புள்ளியைக் காண முனைகையில்மீண்டும் இழுத்து வந்து மாராப்பு விலகுது இழுத்து மூடு என்று மூளியாக்கி சிறகைத் கத்தரிக்கின்றீர்கள்.

    எங்கையோ கேட்டமாதிரி இருக்கா? நீங்கள் எழுதியது தான். என்ன இது கதையா, கவிதையா, கட்டுரையா?
    (டேய் எல்லாளா பதுங்கி இருந்து பாய்கிறாயோ! பாவி!)

    பின்னூட்டம் by எல்லாளன் — மார்ச் 30, 2005 @ 5:11 பிப

  2. This post has been removed by a blog administrator.

    பின்னூட்டம் by raji — மார்ச் 30, 2005 @ 9:05 பிப

  3. நன்றி எல்லாளன். ஆமாம் நான் எழுதிய பழைய கவிதை இது. தங்கள் தளத்தை ஏன் இன்னும் தமிழ்மண முகப்புடன் தொடுக்கவில்லை. தாங்கள் ஏதாவது புதிதாக எழுதியிருக்கின்றீர்களா? என்று ஒவ்வொரு நாளும் தங்கள் தளத்திற்கே வந்து பார்க்க வேண்டியுள்ளது. கெதியாகத் தொடுப்பபைக் கொடுங்கள். நன்றி

    பின்னூட்டம் by கறுப்பி — மார்ச் 31, 2005 @ 5:52 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: