கறுப்பி

மே 3, 2005

நம்பினால் நம்புங்கள்

Filed under: Uncategorized — suya @ 12:35 பிப

வரும் ஜூலை மாதம் ரொறொண்டோவில் புளொக் நண்பர்களுக்கான ஒரு கிழமைக்குத் தொடர்ந்து பல்சுவை நிகழ்ச்சியுடன் ஒரு கூட்டம் (கருத்தரங்கு, விடுமுறை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்) ஒன்றை கறுப்பி ஒழுங்கு செய்திருக்கின்றாள். இந்நிகழ்வில் அனைத்து புளொக் நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை இருந்தாலும் கறுப்பியின் பாங்க் பலன்ஸ் அதற்கு இடம் கொடுக்காததால் கனேடியர்களைத் தவிர்த்து பிற நாடுகளில் இருப்பவர்களில் முதல் விண்ணப்பத்தை நிறப்பி அனுப்பும் 25 நபர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருப்பவர்களுக்கு விசா இழுபறிகள் இருப்பதால் இந்நிகழ்வு ஓகஸ்ட் மாதத்திற்கு பிற்போடும் சாத்தியங்களும் இருக்கின்றன.

நிகழ்ச்சி நிரலாக –

நாள் ஒன்று –

வரவேற்பு (நடனமல்ல)
காலை உணவு – ரிம் ஹோட்டன்ஸ் டோனட்ஸ் உம் கோப்பியும்
குளிரூட்டப்பட்ட உல்லா பேரூந்தில் ரொறொண்டோ நகரத்தைச் சுற்றி
சுற்றுலா.

மதிய உணவு சைவ உணவு – செட்டி நாட்டு உணவகம்
அசைவ உணவு – மட்றாஸ் பலஸ்
தொடர்ந்து – அதே குளிரூட்டப்பட்ட (பேரூந்) பஸ்ஸில் நிகழ்ச்சிக்காக
ஒதுக்கப்பட்ட மண்டபத்தில் சிற்றுண்டிகளுடனான அமர்வு?
நிகழ்சியில் – உலக திரைப்படங்கள்
நனைவிடை தோய்தல் பற்றியும் கலந்துரையாடல்கள்
இறுதியில் கேள்வி பதில்கள் உண்டு

இரவு உணவு இடியப்பம், சொதி, சம்பல். ஒரு கப் பால், வாழைப்பழம்

நாள் இரண்டு

காலை உணவு மக்டொனால்ஸ் பிரேக் பாஸ்ட் பெஷல்
அதே குளிரூட்டப்பட்ட பஸ்ஸில் நயாகரா நீர்;வீழ்ச்சி பயணம்

மதிய உணவு நயாகரா ரெஸ்ரோறெண்ட்
நயாகரா பார்க்கில் மும்பை எக்பிரஸ் சந்திரமுகி பற்றி ஒரு அலசல்
(செக்கியூரிட்டி நயாகராவில் பலமாக இருப்பதால் கமல், ரஜனி ரசிகர்களுக்கான மோதல் தவிர்க்கப்படும்) ரொறொண்டோ திரும்புதல்

இரவு உணவு புட்டு, சொதி, சம்பல், மாம்பழம்

நாள் மூன்று

காலை உணவு வீட்டில் தயாரிக்கப்பட்ட பால் அப்பம்
அதே குளிரூட்டப்பட்ட பஸ்ஸில் ஒன்றாரியோ வாவி ஒன்றிற்குப் பயணம்
மதிய உணவு வாட்டிய கோழி வாட்டிய மரக்கறிகள் வாவியின் அருகில் தயாரிக்கப்படும்.

எமது நாட்டுச் சிறப்பும் நாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் சிறப்பும என்ற பெயரில் புளொக் மெம்பர்கள் சிலர் புழுகித் தள்ளுவர்
கேள்வி பதில்கள் உண்டு.

இரவு உணவு தோசை சட்னி சாம்பார் பால் கோப்பி

நாள் நாலு

காலை உணவு சீரியல் (மெகா இல்லை சதா)
அதே குளிரூட்டப்பட்ட வண்டியில் மீண்டும் ஒரு பூங்காவிற்குச் சென்று இரு பிரிவுகளாகப் பிரித்து விளையாட்டுப் போட்டிகள் வைத்தல்.
(கிளித்தட்டு கெந்திப்பிடித்து கில்லி ஒளித்துப் பிடித்து)

மதிய உணவு சோறு கறி சைவ அசைவ உணவு வகைகள்
கலந்துரையாடல் (தலைப்பு அன்று அங்கு தெரிவு செய்யப்படும், பெண்ணியத்தை விட்டு விடுவோம்) இந்நேரம் பல புதிய நட்புகள் பூத்திருக்கும்- புளொக்கில் அடிபட்டவர்கள் கை குலுக்கிக் கொள்ளலாம்)

இரவு உணவு ரோஸ் பாண் சம்பல் பால் தேத்தண்ணி (கறுப்பியின் ஸ்பெஷல்)
புருட் சலாட்


நாள் ஐந்து

காலை உணவு சான்விச் சைவ அசைவ
அது கு.ஊ வண்டியில் மீண்டும் ரொறொண்டோவின் பிரசித்தி பெற்ற இடங்களைப் பார்வை இடப் பயணம். (சீ.என் ரவர் போன்றவை)

மதிய உணவு பொம்பே பலஸ்
(சின்னத் தூக்கம்)

இரவு குடி, இசை, நடனம் உணவுகளுக்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

(இரவை கனேடிய புளொக் மெம்பர்கள் வீட்டில் கழிக்கலாம். இட நெருக்கடி ஏற்படின் மோட்டல்கள் ஒழுங்கு செய்யப்படும்)

நாள் ஆறு பிரியா விடை (அழுதல் கட்டிப்பிடித்தல் போன்றவை)

புகைப்படப் பொறுப்பு பெயரிலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் குறிக்கோளாகவும் வேண்டுகோளாகவும் கலந்து கொண்டவர்கள் தொடர்ந்து தமது அனுபங்களை புளொக்கில் புகைப்படங்களுடன் எழுதித் தள்ள வேண்டும்

இப்பிடியெல்லாம் சொல்லக் கறுப்பிக்கு ஆசை ஆனால் பாங்க் பலன்ஸ் விடுகுதில்லை. அடுத்த வெள்ளிக்கிழமை Super 7 $22,000,000 மில்லின் என்கிறார்கள் விழுந்தால்?? (பாப்பம்)

Advertisements

9 பின்னூட்டங்கள் »

 1. கறுப்பி,
  விமான டிக்கெட்டும் நீங்களே கொடுப்பீங்களோ ? :-).

  பின்னூட்டம் by Muthu — மே 3, 2005 @ 12:59 பிப

 2. நிச்சயமாக. கறுப்பிக்கு லொட்டோ விழ வேண்டும் என்று பிராத்தியுங்கள்

  பின்னூட்டம் by கறுப்பி — மே 3, 2005 @ 1:06 பிப

 3. நல்ல பகிடிதான். ஆனால், உண்மையாகவே ஏதேனும் ஒழுங்கு செய்தால் இன்னும் நல்லம்.

  பின்னூட்டம் by கிஸோக்கண்ணன் — மே 3, 2005 @ 1:50 பிப

 4. ரொரன்ரோவில், அத்தனைபேர், ஒரு கிழமைக்கு!!!:-)
  அசந்தே விட்டேன்.
  ஏமாற்றிவிடமாட்டீர்களே!! 649 சேர்த்து எடுங்கோ!!!

  பின்னூட்டம் by நற்கீரன் — மே 3, 2005 @ 1:53 பிப

 5. இந்த ஆட்டத்துக்கு என்னையும் சேர்த்துக்கிடுங்கோ! எனக்கு விஸா ப்ராப்ளம் ஒண்டும்
  இல்லை. இந்தியாவுக்கு மட்டும்தான் ‘விஸா’ எடுக்கோணும்!

  டிக்கெட் எப்போ அனுப்புவீங்க

  பின்னூட்டம் by துளசி கோபால் — மே 3, 2005 @ 2:04 பிப

 6. கறுப்பி என்னையும் சேர்க்கலாம் கட்டாயம் வருவன். ஓசி தானே 🙂
  Kulakddan

  பின்னூட்டம் by ஜெயச்சந்திரன் — மே 3, 2005 @ 2:39 பிப

 7. கறுப்பி
  இந்த மாநாட்டை டிசம்பருக்கு தள்ளி வையுங்கோ. அப்பத்தான் நயாகரா பாக்க நல்ல இருக்குமெண்டு கேள்விபட்டன். இன்னும் ரொம்ப நாள் இருப்பதால் நிறைய லாட்டரி வாங்கலாம். அதுக்கு பிரார்த்தனை பண்ண நிறைய நேரமும் கெடைக்கும். அதனால பரிசு விழும் சான்சும் அதிகம். இல்லாவிட்டாலும் கிருஸ்துமஸ் தாத்தா மாநாட்டுக்கு வந்து நிறைய பரிசு கொடுப்பார்.

  பின்னூட்டம் by மு. சுந்தரமூர்த்தி — மே 3, 2005 @ 7:41 பிப

 8. கறுப்பி, ஜூலையில் மெக்சிக்கோவிற்கு சுற்றுலா போவதற்கு யோசித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் இப்படி ஒரு பெரிய Galaவே செய்யவிருப்பதால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன். Please, நரேனையும், ரோசாவசந்தையும் உங்கட செலவில் கூப்பிட்டு விடுங்கள். எனென்றால், நான் பிறகு இந்தியாவுக்குபோனால், தங்களைக் கனடாவுக்குக் கூப்பிடவில்லை என்ற கோபத்தில் என்னை சந்திக்காமல் இருந்துவிடுவார்கள் :-).
  ….
  //இரவு குடி, இசை, நடனம் உணவுகளுக்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.//
  கறுப்பி, என்னை இந்த நிகழ்வுக்கு DJவாய் இருக்க விடுங்கோ. நல்ல remix எல்லாம் போட்டு entertainmentற்கு நான் guarantee.

  பின்னூட்டம் by டிசே தமிழன் — மே 3, 2005 @ 8:00 பிப

 9. கற்பனையில் சில களியாட்டங்கள். சுந்தரமூர்த்தி – டிசெம்பரில நயாகரா பாக்க நல்லாத்தான் இருக்கும். கனடாக் குளிர் என்று ஒண்டிருக்கு அதையும் நாங்கள் கணக்கில எடுக்கவேணும்.

  கிஷோக்கண்ணா- கனடாவில தானே கோடைக்கு ஒரே களியாட்டங்களா இருக்கும் கலந்து கொள்ளுறதுதானே.

  நக்கீரன் – இப்ப எனக்குப் பயமா இருக்கு உண்மையிலையே நான் சு10ப்பர் 7 வெண்டால்???
  குமிலி, துளசி ஓசி எண்ட உடன ஓடிவாங்கோ.
  டீசே கொஞ்ச நாளா புளொக்கில பிசியா எழுதிக்கொண்டிருக்கிற சில பேரைக் காணேலை. நாராயணன், ரோசாவசந்த், மாண்ட்ரீஸர், காசி விடுமுறைக்குப் போட்டார்களோ?

  //கறுப்பி, என்னை இந்த நிகழ்வுக்கு DJவாய் இருக்க விடுங்கோ. நல்ல remix எல்லாம் போட்டு entertainmentற்கு நான் guarantee.\
  இது உங்களுக்குத்தான் கலக்குங்கோ.–>

  பின்னூட்டம் by கறுப்பி — மே 4, 2005 @ 8:00 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: