கறுப்பி

மே 9, 2005

கவிதை

Filed under: Uncategorized — suya @ 12:27 பிப

ஏதாவது எழுது என்பாய்.
என்ன எழுதுவது என்பது தெரியாமல்
நீ கேட்டதற்காய் எழுதுகின்றேன்.
இந்த எழுத்து உனக்குத் திருப்தி தந்தால்,
அது எனக்கும் திருப்தியே.
நீ எதிர்பார்த்ததை நான் எழுதவில்லை என்று நீ நினைத்தால்,
நீ என்னிடம் எதிர்பார்த்தது தவறு.
எழுத ஒன்றுமில்லாத போது
இவ்வளவு எழுதியதே பெரிய விடயம்;
அதுவும்
உன் எழுதப்படாத மின்அஞ்சலுக்கு.
எனக்கு நிறையவே நேரம் இருப்பதாய் நீ குற்றம் சொல்லலாம்.
நேரம் மட்டும் போதுமானதல்ல எழுதுவதற்கு.
ஒருநாள் எழுதுவேன் நீ எதிர் பார்த்தவற்றையும்,
எதிர்பாராதவற்றையும்.

Advertisements

8 பின்னூட்டங்கள் »

 1. கறுப்பி,
  நல்லா கவிதை எழுதுறீங்க.

  பின்னூட்டம் by Muthu — மே 9, 2005 @ 1:04 பிப

 2. //திருப்பி//
  தி?

  பின்னூட்டம் by சுந்தரவடிவேல் — மே 9, 2005 @ 2:42 பிப

 3. //நேரம் மட்டும் போதுமானதல்ல எழுதுவதற்கு.
  ஒருநாள் எழுதுவேன் நீ எதிர் பார்த்தவற்றையும்,
  எதிர்பாராதவற்றையும். //

  அருமையான வரிகள்.

  பின்னூட்டம் by Balaji-Paari — மே 9, 2005 @ 5:07 பிப

 4. /பெரிய விடையம்;/
  ஒரு சின்ன விடயம்;
  அது பெரிய விடயம்.

  பின்னூட்டம் by -/பெயரிலி. — மே 9, 2005 @ 8:08 பிப

 5. ஏதாவது எழுது என்னும் போது ….
  நீ எழுதுவாய்ää எழுதக் கூடியவள் என்ற நம்பிகை இருந்ததுää இருக்கிறது
  ஆனால்
  நீ கேட்டதற்காய் எழுதுகிறேன்….
  சலிப்பு வருகிறது! உங்களை வருத்தி எழுதுகிறாய்.. இதுவே திருப்பிதி தரக் கூடியது அல்ல.
  பொய்யான திருப்தியில் உங்களுக்கு விரும்பம் இருப்பதை காட்கிறது.

  நீ எதிர்பார்த்ததை………….
  அன்புக்குரியவள்ää நம்பிக்கைக்கு உரியவர்களிடம் எதிர்பார்ப்புகள் வீண்போவது குறைவு

  எழுத ஒன்றும் இல்லா போது……………..
  எழுத ஏன் ஒன்றும் இல்லாமல் போனது… அன்று எழுதி எழுதித்தானே இவ்வளவும் நடந்து… ஆனால் இன்று மட்டும்??????????????

  நிறையவே நேரம் இல்லாத போது எழுதப்பட்ட பந்திகள் இன்று நேரம் இருக்கும் போது வரிகளையேனும் காணவில்லை என்ற ஏக்கம் சாதாரணம்.

  கேட்கப்படாமலே வரையப்பட்ட காகிதங்கள் இன்றும் என் அஞ்சலில்!!!!!!!!!!!! சாட்சிகளாக….

  நேரம் மட்டும் போதுமானது அல்ல……..
  அது உண்மை மனமும்ää இடமும் வேண்டும்
  ஆனால் அது இன்று இல்லை அதுவும் உண்மை!!!!!!!!!!!!1

  ஒரு நாள் எழுதுவேன்………..

  நல்ல வரி………. ஆனால் கொஞ்சம் அகங்காரம் தொனிக்கிறது.. இது நல்ல சகுனமாய்த் தெரியவில்லை.

  எல்லா வற்றிக்கும் காரணமாக இருந்து விட்டு விடைகளை விரும்பாத கேள்விகளை மட்டும் கேட்கத் துணிவது மனசுக்கு கொஞ்சம் கஸ்டமாக இருக்கு கறுப்பி…………..

  பின்னூட்டம் by வெளிச்சம் — மே 9, 2005 @ 9:52 பிப

 6. முத்து நன்றி
  சுந்தரவடிவேல் மாற்றி விட்டேன் நன்றி
  போஸ்டன் பாலா நன்றி
  பெயரிலி – உம்மோட பெரிய பேஜாராப் போச்சு – மாற்றி விட்டேன் நன்றிகள்
  வெளிச்சம் – என்ன ஏதோ ஒரு கவிதை என்று நான் சின்னதாக எழுதியதை அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ந்திருக்கின்றீர்கள். இதற்குள் இத்தனை அர்த்தமா என்று எனக்கு இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. நன்றிகள்.

  பின்னூட்டம் by கறுப்பி — மே 10, 2005 @ 6:10 முப

 7. சொல்லிய சொல்லிற்கு ஓரர்த்தம்
  சொல்லாத சொல்லுக்கு பல அர்த்தம்
  என்று நானெழுதிய தமிழின் தலை சிறந்த கவிதை வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன. 🙂

  பின்னூட்டம் by கிஸோக்கண்ணன் — மே 10, 2005 @ 1:21 பிப

 8. கறுப்பி – அழகான செல்லப் பெயர். அழகான கவிதை.

  “நேரம் மட்டும் போதுமானது அல்ல……..”

  நேரம் இருந்தும் மனம் இருந்தும், வார்த்தைகள் இல்லாமல் வெற்று காகிதங்களாக.. பல!

  வெளிச்சம்: பல அர்த்தங்கள் – பல உண்மைகள்!

  பின்னூட்டம் by Penmathi — மே 19, 2005 @ 7:26 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: