கறுப்பி

மே 11, 2005

மெதுவாக உன்னைத் தொட்டு

Filed under: Uncategorized — suya @ 11:50 முப

எமது கலைஞராக ரவி அச்சுதனின் “மெதுவாக உன்னைத் தொட்டு” திரைப்படம் பற்றிய எனது விமர்சனத்தை இங்கே வைக்கின்றேன்.

1995இல் இருந்து ரவி அச்சுதன் அவர்கள் தனது கலைப்படைப்புக்களான நவராகங்கள் (இந்தியத் திரைப்படப்பாடல்களுக்கு எமது கலைஞர்கள் நடித்தல்), தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் என்று வழங்கி வருவதன் மூலம் கனடா வாழ் மக்களிடையே நல்ல பரிச்சியமான ஒரு கலைஞராக விளங்குகின்றார்.
ரவி அச்சுதன் பல திரைப்படங்களிற்கு படப்பிடிப்பாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றியிருந்த போதும் “மெதுவாக உன்னைத் தொட்டு” திரைப்படம் தான் அவர் ஒரு முழு நீளத் திரைப்படமாக இலங்கை, இந்தியா, கனடா போன்ற நாடுகளில் படப்பிடிப்புச் செய்தும் பாடல் காட்சிகள் இணைத்தும் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியிட்ட திரைப்படம் என்று கூறலாம். இனி இத் திரைப்படம் பற்றிய எனது விமர்சனத்திற்கு வருவோம்
நாம் பல இந்தியத் தமிழ் திரைப்படங்களைப் பார்த்திருக்கின்றோம். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் பின்னர் அதே சாயலில் பல திரைப்படங்கள் வந்து போகும். இது இந்தியத் திரைப்பட இயக்குனர்களுக்குப் பிடித்த சாபக்கேடு எனும் போது, எமது கலைஞர்க ரவி அச்சுதனும் அதே பாங்கில் பல இந்தியத் திரைப்படங்களின் கதையை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் கிள்ளி, சில காட்சிகளையும் இந்தியப் பாணியில் காட்டி மிகச் சிரமப்பட்டு ஒரு இந்தியக் கலவையை எமது கலைஞர்கள், இந்தியக் கலைஞர்கள் என்று இணைத்துத் தந்துள்ளார்.
இலங்கையில் வாழும் ஒரு இன நாட்டுப் பற்றுள்ள ஒரு இளைஞன் எழுதிய ஒரு கவிதைக்காய் இலங்கை ராணுவத்தால் தாக்கப் படுகின்றான். மகனின் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கிய அவனது பெற்றோர் அவனை கனடாவிற்கு அனுப்பு முகமாக முதலில் அவன் செல்வது இந்தியாவிற்கு. அங்கே அவன் தனது பொருட்களைத் தொலைத்து விட்டு சீர்காழியில் தங்கியிருக்கும் போது இந்தியக் கிராமப்புறப் பெண்ணான சுஜிமேல் காதல் கொள்கின்றான். பின்னர் பயணம் சரி வந்ததும் சுஜியைக் காத்திருக்குமாறு வாக்குக் கொடுத்து விட்டு கனடா வந்து தெரிந்தவர் ஒருவர் வீட்டில் தங்கியிருப்பவன் மேல் வீட்டுக்காற நாகரீக மங்கைக்கு(மாயா) காதல் நாயகனின் மிக மிக நன் நடத்தையில் மயங்கிய பெற்றோரும் மகளிற்காக நாயகனுடன் கதைத்துப் பார்க்கின்றார்கள்.
காதலி சுஜிக்கு பல கடிதங்கள் போட்ட போதும் பதில் இல்லை.. குழம்புகிறான் நாயகன். இறுதியில் சுஜி தனது மாமன் மகனைத் திருமணம் செய்து விட்டாள் என்ற செய்தி புகைப்பட அத்தாட்சியுடன், மாயாவின் காதலை தனக்கு உதவி செய்த குடும்பதிற்காக ஏற்று அவளை மணக்கச் சம்மதித்தாலும் அவளது அதி உச்ச நாகரீகம் அவனுக்கு குழப்பத்தைத் தருகின்றது.
இறுதியில் சுஜிக்குத் திருமணம் ஆகவில்லை, அது மாமன் மகன் செய்த சதி என்றறிந்து சீர்காழிக்குப் பறந்து செல்கின்றான் நாயகன். மாயா, அவளது பெற்றோரின் சம்மதத்துடன்.
அவன் அங்கே போய் இறங்க மாமன் மகன் கையில் தாலியைச் சுழற்றி “என்ர கரக்டறையே புரிஞ்சு கொள்ளேலையே” என்று கூறிய படி சுஜியை நோக்கி வர சுஜி பயந்தபடியே தாய்க்குப் பின்னால் ஒதுங்க நாயகன் பாய்ந்து மாமன் மகனைத் தாக்க
என்ன சொல்ல.. என்ன சொல்ல…
முதலில் நாயகனுக்கு எப்படி சுஜி மேல் காதல் வந்தது என்று பார்ப்போம்
குறுக்குக் கட்டோடு நாயகி குளத்தில் குளித்துக்கொண்டு இருக்கின்றார். நாயகன் Pants Shirt உடன் பை ஒன்றைத் தோளில் போட்ட படியே வயல் வரம்பால் இயற்கையை ரசித்த படி வருகின்றார். நாயகன் வர நாயகி குளத்தால் எழும்ப கண்ணும் கண்ணும் மோதிக் காதல் வந்திச்சாம்.
அடுத்து நாயகன் கனடா வந்து இறங்கியவுடன் தனது கவர்ச்சியைக் கொள்ளையாகக் காட்டி அவனைக் காதலிக்கின்றாள் மாயா.

பெண்களிடம் காதலிப்பதற்கு உடல் ஒன்று மட்டும்தான் உள்ளது போன்றும், அவர்களுக்கு ஆண்கள் காதலிப்தற்கான தனித்தன்மை, திறமை ஒன்றுமே இல்லாதது போலும், பெண்களை மிகவும் கொச்சைப் படுத்தியுள்ளார் ரவி அச்சுதன்.
நீச்சல் உடையில் மாயாவை வீட்டுக் குளியல் அறைக்குள் குளிப்பது போன்ற காட்சி இத்திரைக் கதைக்கு எதற்காக என்பது இன்னும் எனக்குப் புரியவில்லை.
மொத்தத்தில் பல தரமற்ற இந்தியத் திரைப்படங்களின் கலவையில் வெளிவந்த ஒரு எம்மவர் படைப்பு இந்த “மெதுவாக உன்னைத் தொட்டு”

ரவி அச்சுதன் இந்தியா போய் இந்தியப் படம் போல் ஒன்றை எடுத்து விட்டார் என்று கனடாவில் இருக்கும் மற்றய இயக்குனர்களும் இந்தியா நோக்கிப் பறக்கத் தொடங்கி விட்டார்கள். இது எங்குபோய் முடியுமோ தெரியவில்லை.

ம்.. கறுப்பிக்கும் ஒரு எண்ணம் இருக்கிறது. முடிந்தால் ஈழத்தில் முடியாவிட்டால் இந்தியாவில் போய் ஒரு விவரணப்படம் எடுக்க வேண்டும் என்று

Advertisements

9 பின்னூட்டங்கள் »

 1. இன்னொரு தமிழகச் சினிமாப்படம் இவர் ஏன் எடுக்க வேண்டும்? அதற்குத்தான் தமிழகத்தில் நிறையப்பேர் இருக்கின்றார்களே! பேசாமல் கலைப்படமே எடுக்கலாம். கலப்படம் வேணாமே!

  அவரது கதாபாத்திரங்கள் என்ன தமிழ் பேசினார்கள்?

  பின்னூட்டம் by கிஸோக்கண்ணன் — மே 11, 2005 @ 3:28 பிப

 2. /ம்.. கறுப்பிக்கும் ஒரு எண்ணம் இருக்கிறது. முடிந்தால் ஈழத்தில் முடியாவிட்டால் இந்தியாவில் போய் ஒரு விவரணப்படம் எடுக்க வேண்டும் என்று/
  இப்பிடியான படங்களை எடுக்கிறவர்களைப் பற்றி ஒரு விவரணம் எடுக்கலாமே?

  பின்னூட்டம் by -/பெயரிலி. — மே 11, 2005 @ 5:24 பிப

 3. கிஸோ யாழ்ப்பாணத் தமிழ் இந்தியத் தமிழ் ரெண்டும் கலந்து வந்தது.

  பெயரிலி நீங்கள வேற. ரவிஅச்சுதன் முன்பு என்னுடன் நன்றாகக் கதைப்பார். என் இந்த விமர்சனம் கனேடியப் பத்திரிகை ஒன்றில் வந்தது. அதை வாசித்து விட்டுத் தனது படத்தை ஓடாமல் பண்ண முயல்கின்றேன் என்பது போல் கொஞ்சம் கோபமாகக் கதைத்தார். அத்தோடு இந்தப் படத்தில் என்ன உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று மிகவும் அப்பாவியாகக் கேட்டார். இந்தியாத் தமிழ் படத்தை மிகவும் உச்சத்தில் வைத்திருக்கும் இவர் போன்றவர்களுக்கு வேறு ஒன்றும் தெரிவதில்லை. இப்போது என்னோடு ரவிஅச்சுதன் கதைப்பதுமில்லை. அதன் பின்பு தொடர்ந்து சில ஈழக்கலைஞர்களின் திரைப்படங்கள் கனடாவில் வெளியிட்டார்கள். கனடாவில் எடுக்கப்பட்ட படங்கள். என்னத்தைச் சொல்ல ஒரே சமூகத்தைத் திருத்துவதற்கு எல்லோரும் அப்பிடி முனைகின்றார்கள். ஆகா, ஓகோ என்ற புகழ்ந்தவர்கள் பலர். நான் விமரச்சனம் எழுதுவதை நிறுத்திக் கொண்டு விட்டேன். இவர்களை வைத்து விவரணப்படம் வேண்டாமப்பா தொல்லை.

  பின்னூட்டம் by கறுப்பி — மே 12, 2005 @ 6:18 முப

 4. /இவர்களை வைத்து விவரணப்படம் வேண்டாமப்பா தொல்லை./
  இவர்களை *வைத்து* அல்ல; இவர்களைப் *பற்றி*

  பின்னூட்டம் by -/பெயரிலி. — மே 12, 2005 @ 8:23 முப

 5. ரெண்டும் ஒன்றுதான். தமது படைப்புகளுக்கான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் இவர்கள். ஏதோ நான் காழ்புணர்வில் சீண்டுவதாகத்தான் இவர்கள் பார்க்கின்றார்கள். ஏன் வீண் தொல்லை.

  பின்னூட்டம் by கறுப்பி — மே 12, 2005 @ 8:46 முப

 6. உங்களைப்போல அநீதியைக் கண்டு எதிர்கொள்ள இயல்பிலேயே போராட்ட குணமும் உணர்வுமுள்ளவர்கள், இப்படியாக, “ஏன் எனக்கு வம்பு?” என்பது எனக்கு ஆச்சரியமளிக்கின்றது. 😉

  பின்னூட்டம் by -/பெயரிலி. — மே 12, 2005 @ 10:27 முப

 7. ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ பெயரிலி. நேரத்தை வீணடித்து விவரணப்படம் எடுக்கும் அளவிற்கு அது எனக்கு முக்கியமாகப் படவில்லை. ராஜேந்தரைப் போய் ஏன் இப்படியான படங்கள் எடுக்கின்றீர்கள் என்ற தொல்லைப்படுத்த விரும்புகின்றீர்களா? பேசாமல் விட்டு விடுவது மேல் என்றுதான் நான் நினைக்கின்றேன். கமெரா கையில் இருக்கிறது. ஏன் வீணடிப்பான் என்று படம் எடுக்கின்றார்கள். சிலர் பெருமையாகத் தாம் பிரதி கூட எழுதுவதில்லை என்று பெருமையாகக் கூறுகின்றார்கள். ஆனால் முழுநீளப்படத்தை எடுக்கின்றார்கள். எப்படி எடுக்கின்றார்களோ தெரியவில்லை.

  பின்னூட்டம் by கறுப்பி — மே 12, 2005 @ 10:47 முப

 8. vaNakkam.
  we wanttake lot of documentrys about srilankan tamils.we can do it.now i m takeing documentry film.
  all the best.we can make good film.
  somee

  பின்னூட்டம் by சோமிதரன் — மே 12, 2005 @ 11:05 முப

 9. பெயரிலி!
  கறுப்பிய ஒரு வழி பண்ணுறது எண்டே முடிவெடுத்திட்டியள் போல.
  நடத்துங்கோ.
  எனக்கும் உங்கட கேள்வியள்தான்.

  பின்னூட்டம் by வசந்தன்(Vasanthan) — மே 12, 2005 @ 5:07 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: