கறுப்பி

மே 25, 2005

நேர்கொண்ட பார்வை

Filed under: Uncategorized — suya @ 1:04 பிப

த்ரிஷாவின் குளியல் அறைக்காட்சி என்று சஞ்சிகைகள் இணையத்தளங்களில் படித்திருக்கின்றேன். நடிகைகளைப் பற்றி அவதூறு வருவதென்பது ஒன்றும் புதிதல்ல. நடிகர்களுக்கு மிஞ்சிமிஞ்சிப் போனால் ஒரு பெண்ணுடன் தொடர்பு என்பதோடு கிசுகிசு நின்று விடும். ஆனால் நடிகைகள் எனும் போது அவரின் அன்றாட வாழ்க்கையே கண்காணிக்கப்பட்டு இரட்டை அர்த்தமாக்கிப் பிரசுரித்து மகிழ்கின்றன ஊடகங்கள். நடிகை மூக்கு ஒப்பரேஷன் செய்து கொண்டார் என்பதிலிருந்து விபச்சாரம் செய்கின்றார் என்பது வரை ஆண்களுக்குப் பிடித்த கிசுகிசுவாகவே உள்ளன. திரைப்படங்களில் கமெராவை உடல் முழுவதும் ஊர விட்டு இன்பம் காண்கின்றது சினிமா. பார்வையாளர்களின் விசில் அடி சகிக்க முடியாமல் இருக்கின்றது.
முன்பு ஒரு காலத்தில் சினிமா நடிகைகள் என்றால் பணக்கஷ்டம் உள்ளோர் என்று கொஞ்சம் தரம் குறைவாக எடை போடும் காலம் இருந்தது. ஆனால் இப்போது கல்லூரிப் பெண்களில் இருந்து வசதிபடைத்த பெண்கள்வரை நடிக்கும் ஆர்வத்தால் வருகின்றார்கள். நடிகைகளைச் சினிமா உலகம் கௌரவமாக நடாத்துகின்றது என்பதாய் சில மேலோட்டமாக கருத்துக்கள் பரவி வருகின்றன. இப்படியான கருத்துக்களும் பார்வைகளும் வரவேற்க வேண்டியவை. ஆனால் இக்கருத்துக்கள் உண்மையா என்றால்? சந்தேகமாகவே உள்ளது.
அண்மையில் எனது நண்பர் ஒருவர் வீட்டில் த்ரிஷா பாத்ரூம் இல் குளிக்கும் போது எடுத்த வீடியோ பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. (பார்த்த பின் எனக்கு மிகவும் குற்ற உணர்வாக இருந்தது) ஒரு சின்னப் பெண். முன்னணி நடிகையாக இருக்கின்றார். அவரை நிர்வாணமாக அக்குவேறு ஆணி வேறாக படம் பிடித்து எல்லோரின் பார்வையிலும் கிடைக்கும் படி செய்திருக்கின்றார்கள்.
இந்தியாரூடேயில் இந்த சம்பவத்தை த்ரிஷா எப்படிச் சந்தித்தார் என்பதைக் குறிப்பிட்டு அவரைப் பாராட்டி உள்ளார்கள். முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவரை இப்படியாகக் கேவலப்படுத்தும் போது அவர் உடைந்துபோய் சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று எடுத்தவர் திட்டம் போட்டிருக்கலாம். இல்லாவிட்டால் வெறும் பணத்திற்காகவோ? கிளுகிளுப்பிற்காகவோ செய்திருக்கக் கூடும். த்ரிஷா உடைந்து விடாமல் இச்சம்பவத்தை துணிவுடன் எதிர்நோக்கி தனக்குச் சந்தேகமானவரைப் பிடித்துக் கொடுத்துள்ளதாகவும் படித்தேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்ற தகவல் எனக்குக் கிடைக்கவில்லை.
இருந்தும் அந்தச் சின்னப் பெண்ணின் துணிவு எனக்குள் மிகுந்த மகிழ்சியைத் தந்தது. குட்டக் குட்டக் குனிவார்கள் பெண்கள் என்று நினைத்திருக்கும் எங்கள் சீர்கெட்ட சமூகத்திற்குப் பாடம் புகட்ட த்ரிஷா போன்றவர்கள் நிச்சயம் தேவை.

Advertisements

8 பின்னூட்டங்கள் »

 1. //எனது நண்பர் ஒருவர் வீட்டில் த்ரிஷா பாத்ரூம் இல் குளிக்கும் போது எடுத்த வீடியோ//

  அட,திரிஷா குளிச்சது உங்க நண்பர் வீட்டு பாத்ரூமிலே தானா?

  பின்னூட்டம் by Erode Films — மே 25, 2005 @ 3:08 பிப

 2. அது திரிஷா இல்லை என்பதை நீங்கள் நம்ப வேண்டும். முதல் 3 நிமிட காட்சியை பார்த்திருப்பீர்கள்.

  அது திரிஷாவே இல்லை என்று நீங்களும் நம்புவீர்கள் மிகுதி காட்சிகளையும் பார்த்தால். மின்னஞ்சல் அனுப்புங்கள். பின்னர் நீங்களாகவே பதிவிடுவீர்கள் அது திரிஷா இல்லையென்று!!!

  பின்னூட்டம் by கொழுவி — மே 25, 2005 @ 6:07 பிப

 3. ஐயா மஸ்ட்டூ!
  உமது பதிவைத் தடை செய்த மாதிரி உம்மையும் முழுவதுமாகத் தடை செய்ய வேணும். இணையப் பயங்கரவாதி;-((

  பின்னூட்டம் by வசந்தன்(Vasanthan) — மே 25, 2005 @ 7:06 பிப

 4. This post has been removed by the author.

  பின்னூட்டம் by Anonymous — மே 25, 2005 @ 11:27 பிப

 5. இது நகைச்சுவையாகக் கதைக்கும் விடையம் அல்ல. அது த்ரிஷாவை இல்லையா என்பது கூடப் பிரச்சனை இல்லை. ஆனால் பார்வைக்கு த்ரிஷா போல் இருக்கும் போது அவர்கள் குறி எங்கே என்று புரிகின்றது. பெண்களின் உடைலை யாராவது பார்த்துவிட்டால் அது அவமானம், கேவலம் ஆனால் ஆண்கள் தாமாகவே தமது வெற்றுடலைப் பெண்களுக்குக் காட்டி இன்புறுவார்கள்.(ஊரில் இப்படிச் சிலரைச் சந்திச்சிருக்கின்றேன்) அங்கும் பெண்கள்தாம் வெருண்டடித்து ஓட வேணும். என்ன உலகம் இது.
  இந்த வீடியோ நிகழ்விற்கு இந்தியாவில் ஏதாவது பெண்கள் அமைப்பு எதிர்த்து ஏதாவது செய்தார்களா? எனக்குத் தெரிந்து நான் கேள்விப்படவில்லை.

  பின்னூட்டம் by கறுப்பி — மே 26, 2005 @ 7:37 முப

 6. கறுப்பி

  ரசிக்கத் தெரிந்தவரே
  நடிக்கத் துணிய வேண்டும்
  நம்பிக்கை கொண்டவரே
  படம் எடுக்கத் துணிய வேண்டும்
  படிக்கத் தெரியாதாரும்
  பார்த்துத் தெளிய வேண்டும்
  படத் தொழில் வளம் சிறக்க பண்பட்ட திறன் வேண்டும்

  பட்டுக் கோட்டையின் பாடல் வரிகள்
  எனக்குப் பிடித்திருக்கு உங்களுக்கு?

  ஏன் இதை எழுதுறான் என்று நினைக்கின்றீர்களா?
  ஏதாச்சும் ஒரு இதுக்குத் தான்………ஹா ஹா

  பின்னூட்டம் by அருவி-ARUVI — மே 29, 2005 @ 10:41 முப

 7. கறுப்பி…..

  த்ரிஷாவை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்…..
  ஆனால் கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா…… அப்படி போடு……. கட்டு கட்டு கீரை கட்டுன்னு
  ஆட்டம் போடும் போது…… கொஞ்சம் அவரை ஓரங்கட்டவும் வேண்டும்……..

  பின்னூட்டம் by Go.Ganesh — மே 31, 2005 @ 6:08 முப

 8. கோ கணேஸ் உங்கள் கருத்து எனக்குப் புரியவில்லை. த்ரிஷா ஒரு நடிகை. அவர் மட்டுமா அப்படியா பாடல்களுக்கு நாட்டியமாடுகின்றார். “கலியாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா” இதை விடக் கேவலமான பாடல்கள் இல்லையா?

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூன் 1, 2005 @ 7:33 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: