கறுப்பி

ஜூன் 14, 2005

“காலம்” சஞ்சிகை – 24வது இதழ்

Filed under: Uncategorized — suya @ 7:35 முப

கனடாவில் வெளியாகும் “காலம்” சஞ்சிகை குறித்து எனது ஆதங்கத்தை புலம்பெயர் இலக்கிய வளர்ச்சி என்ற தலைப்பில் முன்பு எழுதியிருந்தேன். கனடாவில் பல ஆண்டுகளாக வெளியாகி வரும் ஒரே சஞ்சிகை என்ற பெருமையைக் “காலம்” சஞ்சிகை கொண்டிருப்பினும் தொடக்கத்தில் ஈழத்து புலம்பெயர் தமிழரின் படைப்புக்களை அனேகமாகத் தாங்கி வந்த இந்த சஞ்சிகை கடந்த சில வெளியீடுகளில் இந்திய தமிழ் படைப்பாளிகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. இந்திய தமிழ் படைப்பாளிகள் எனும் போது இந்தியாவில் இலக்கியத்தில் முன்னணியில் பலரால் பேசப்படும் படிக்கப்படும் ஜெயமோகன், சுந்தரராமசாமி, மனுஷபுத்ரன் போன்றோரின் படைப்புக்களைத் தாங்கி வரத்தொடங்கியது. இந்தப் படைப்பாளிகள் தமது படைப்புக்களை வெளிக் கொணருவதற்கு இந்தியாவில் பல தரமான சஞ்சிகைகள் உள்ளன. அனேக சஞ்சிகைகளில் இவர்களின் எழுத்துக்களை நாம் காணக்கூடியதாகவும் இருக்கின்றது. இவ்வேளை “காலம்” சஞ்சிகையும் அவர்களின் படைப்புக்களை வெளியிடுவது அவசியமற்றது என்பதே எனது எண்ணம்.

ஆனால் 24வது இதழான “காலம்” சஞ்சிகையில் பெரிய மாற்றத்தை நான் காண்கின்றேன். இலக்கியத் தோட்டத்தின் விருது விழாச் சிறப்பு இதழாக, பத்மநாபஐயரின் அட்டைப்படத்துடன் பத்மநாபஐயரின் இலக்கியச் சேவைகள் பற்றிய பல இலக்கியவாதிகளின் கட்டுரைகளுடனும், பல புலம்பெயர் ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புக்களுடனும், 24வது இதழ் வெளிவந்திருப்பது மீண்டும் “காலம்” சஞ்சிகை ஈழத்து புலம்பெயர் இலக்கியவாதிகளின் படைப்புக்களை வெளிக்கொணரும் ஒரு சஞ்சிகையான தொடர்ந்தும் வரும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது.

Advertisements

1 பின்னூட்டம் »

  1. karuppy, could you send me a mail
    sbalaji at gmail.com ?

    பின்னூட்டம் by Balaji-Paari — ஜூன் 14, 2005 @ 9:30 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: