கறுப்பி

ஜூலை 13, 2005

தொடர்கின்றார் தீபா மேத்தா

Filed under: சினிமினி — suya @ 10:16 முப

தீபா மேத்தாவின் திரைப்படமான “Water”, 2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவில் "வாரநாசி" எனும் இடத்தில் படப்பிடிப்புத் தொடங்குவற்கான ஆயத்தங்களில் இருந்தது. 30களில் கணவனை இழந்து “விதவை” என்று அழைக்கப்பட்ட பெண்கள், நிர்பந்தத்தின் பெயரில் “விதவைகள் ஆச்சிரமம்” களுக்கு அனுபப்பட்டிருக்கின்றார்கள். அது இன்றும் தொடர்கின்றது. அன்றும், இன்றுமாக சம்பவங்களைக் கோர்த்து "Water" திரைக்கதையை அமைத்திருக்கின்றார் தீபா மேத்தா. "வாரநாசி" எனும் இடத்தில் இன்றும், "விதவை ஆச்சிரமங்கள்" இயங்கி வருவதால் படப்பிடிப்பை அங்கேயே வைக்க தீர்மானித்து படக்குழுவின் வாரநாசி சென்றபோது, அங்கே பல கண்டன ஊர்வலங்களும், மிரட்டல்களும் மதவாதிகளாலும், அரசியல்வாதிகளாலும் நிகழ்த்தப்பட்டு "Water" படப்பிடிப்புத் தொடங்காமலேயே ஊற்றபட்டு விட்டது.


A mob destroys the set of Deepa Mehta's Water

தீபா மேத்தா மிரட்டலுக்குள்ளாவது இது முதல்தடவையல்ல. அவரின் திரைப்படமான "Fire" 1996இல் வெளியான திரைப்படம். இத்திரைப்படம், கணவரால் பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்குள் ஏற்படும் காதல் உறவு பற்றிப் பேசுவது. Fire திரைப்படம் படமாக்கபட்ட போதும் மிகப் பெரிய அளவில் கண்ட ஊர்வலங்கள் நாடாத்தப்பட்டு திரைப்பட முதல் காட்சியிலேயே திரையரங்கு தீ மூட்டி திரைப்படச் சுருள் அழிக்கப்பட்டது. தொடர்ந்து 1998இல் "Earth" திரைப்படம் முஸ்லீம், இந்துக்களுக்கான பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. Fire, Earth போன்ற திரைப்படங்கள் ஆபாசக்காட்சிகளை உள்ளடக்கியுள்ளதா பல இந்திய விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.


Torched by protesters, a piece
of the Water set burns

தற்போது "Water". இந்தியாவின் இன்றும் இருக்கும் பெண்ணடிமைத் தனத்தை, இந்தியாவில் பிறந்து அதன் கலாச்சாரம் பண்பாடோடு ஒன்றி வளர்ந்து, டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டம் பெற்ற பெண்ணான தீபா மேத்தாவைத் தவிர யாரால் முழுமையாகத் தரமுடியும்?

தீபா மேத்தாவின் தந்தை, ஒரு திரைப்பட விநியோகிதரும், திரையரங்கு உரிமையாளரும். இதனால் தீபா மேத்தா சிறுவயதிலிருந்தே பல திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர். இருப்பினும், அவருக்கு திரைப்படத்துறையில் அதிகம் ஈடுபாடு இருக்கவில்லை. படிப்பை முடித்து வேலைக்கு அமர்ந்தவர் ஒரு விவரணத் திரைப்படத்தில் பகுதி நேர உதவியாளராக வேலை செய்யும் சந்தர்ப்பம் வாய்த்த போது, தனக்குள் இருக்கும் திரைப்பட ஆர்வத்தைப் புரிந்து கொண்டதாக தீபா மேத்தா கூறுகின்றார். 1973ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆய்வை மேற்கொண்டிருந்த கனேடிய திரைப்பட இயக்குனரான Paul Saltzman காதலித்துத் திருமணம் செய்து கனடாவிற்கு இடம்பெயர்ந்தவர்.

திரைப்படத்துறை பற்றிய நேரடியான அறிவு இல்லாதபோதும், தீபா மேத்தா ஆரம்பகாலங்களில் பல விவரணப்படங்களைத் தயாரித்திருக்கின்றார். தொடர்ந்து குழந்தைகளுக்கான திரைப்படப் பிரதியை எழுதத் தொடங்கியவர், 1991இல் தனது முதல் முழுநீளத் திரைப்படம் “Sam & Me” ஐ தயாரித்து, இயக்கினார். இத்திரைப்படம் பலத்த வரவேற்பைப் பெற்று, அவருக்கு முதல் விருதை(Honorable Mention) பெற்றுத்தந்திருக்கின்றது.

2000ம் ஆண்டு நிறுத்தப்பட்ட Water திரைப்படம் நான்கு வருடங்களின் பின்னர், மீண்டும் இலங்கையில் படப்பிடிப்பு செய்யப்பட்டு முழுமை அடைந்திருக்கின்றது. மாற்றங்களாக, ஷாபனா ஆஸ்மிக்குப் பதிலாக சீமா பிஸ்வாவும் (பாண்டிட் குயின் நாயகி), ஆக்ஷேக்குப் பதிலாக ஜோன் ஏப்ரஹாமும், நந்திதாவிற்குப் பதிலாக லீசா ரேயும் (பொலிவூட் கொலிவூட் நாயகி) நடித்திருக்கின்றார்கள். 2005ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடம்பெற இருக்கும் ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவின் தொடக்கத் திரைப்படமாக செப்டெம்பர் 8ம் திகதி "Gala" திரையரங்கில் “Water” திரையிடப்பட இருக்கின்றது. Water இந்தியாவில் திரையிடப்படுமா? என்று தீபா மேத்தாவை நிருபர்கள் கேட்ட போது, திரையிடப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எல்லாம் விநியோகர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும் பொறுத்தது என்கின்றார்.

பார்த்தவர்கள் தீபாமேத்தாவின் மிகச் சிறந்த திரைப்படமாக "Water"க் கூறினாலும் தனது மூன்று திரைப்படங்களையும் சமனாகவே நேசிக்கின்றேன் என்கின்றார் தீபா மேத்தா. இருந்தும் Water திரைப்படம் தந்த அளவிற்கு பிரச்சனைகளையும், நோவையும் மற்றைய எனது திரைப்படங்கள் தராததால் இத்திரைப்படம் எனது அபிமான திரைப்படமாவதில் வியப்பில்லை என்றும் கூறுகின்றார்.

திரைப்படத்தைப் பார்த்து விட்டு விமர்சனத்தை வைக்கின்றேன்.

Advertisements

14 பின்னூட்டங்கள் »

 1. படம் எப்படியிருக்குமென்று யூகிக்கமுடியாவிட்டாலும், வெகுநாள் முன்பு அக்.ஷய் குமார் குறித்து தீபா மேத்தா சொல்லியிருந்த “அக்.ஷய்க்கு wooden face என்கிறார்கள், அந்த wooden faceக்காகத்தான் இந்தப் பாத்திரத்துக்கு அவரைத் தேர்ந்தெடுத்தேன்” என்பது ஜான் ஆபிரஹாம் விஷயத்தில் எப்படிப் பொருந்துகிறதென்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

  பின்னூட்டம் by மாண்ட்ரீஸர் — ஜூலை 13, 2005 @ 11:43 முப

 2. மாண்டிரீஸர்,
  நடிகர்களை ஏன் மாற்றினார் என்று எங்கும் தீபா மேத்தா கூறி நான் படிக்கவில்லை. எனக்கு தீபா மேத்தா, ஷாபனா ஆஸ்மி, நந்திதா, ஆக்ஷய் இவர்களின் கூட்டு ரொம்பப் பிடித்திருக்கின்றது. இனிப் படம் பாத்த பின்னர்தான் மிகுதியைக் கூற முடியும்.

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 13, 2005 @ 11:56 முப

 3. எனக்கு தீபா மேத்தா, ஷாபனா ஆஸ்மி, நந்திதா, ஆக்ஷய் +John Abraham இவர்களின் கூட்டு பிடித்திருக்கின்றது.

  பின்னூட்டம் by சினேகிதி — ஜூலை 13, 2005 @ 12:26 பிப

 4. சினேகிதி,
  ஆசை தோசை அப்பளம் வடை. (*_*)

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 13, 2005 @ 1:57 பிப

 5. ஐ…நான் நினைச்சன் தனிய தோசையும் சம்பலும்தான் செய்து தருவியள் என்று இப்ப வடை அப்பளமும் சேர்ந்தாச்சே

  பின்னூட்டம் by சினேகிதி — ஜூலை 13, 2005 @ 3:07 பிப

 6. கறுப்பி

  நல்ல பதிவு. தீபா மேத்தா உளவியில் படித்தவர் என்பது எனக்கு புதுமையான செய்தி. நன்றி.

  “…2005ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடம்பெற இருக்கும் ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவின் தொடக்கத் திரைப்படமாக செப்டெம்பர் 8ம் திகதி “Gala” திரையரங்கில் “Water” திரையிடப்பட இருக்கின்றது….”.

  இது சம்பந்தமாக இன்னும் கொஞ்சம் விவரம் தரமுடியுமா? எத்தனை நாட்கள், கட்டணம் எவ்வளவு? இப்படி சில…

  மயிலாடுதுறை சிவா…

  பின்னூட்டம் by ManiKoondu — ஜூலை 13, 2005 @ 3:39 பிப

 7. சிவா,

  http://www.e.bell.ca/filmfest/2005/home.asp

  இந்தத் தளத்திற்குப் போனால் முழு விபரமும் கிடைக்கும். எப்போதுமே Gala $25 + tax ஆக இருக்கும்.

  சினேகிதி. ஆசைக்கு ஒரு அளவிருக்க வேண்டும் என்று சொன்னேன்.

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 14, 2005 @ 6:10 முப

 8. லிசா ரே இதில் விதவையாக வருகிறார். சில பெண் முகங்கள் பார்க்க வசீகரமாகவும், களையாகவும் அமைந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு முகம் லிசா ரேவினுடையது. இந்தியாவில் ஹிந்து அடிப்படைவாதிகள் இப்படத்திற்காக கலாட்டா செய்தது மிகப் பெருத்த அவமானம். ஒரு நல்ல இயக்குநரை இந்திய அரசியல் எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கும் என்பதற்கு தீபா சரியான உதாரணம்.

  மாண்டீ சொன்னது போல படம் வரட்டும் பார்ப்போம். ஜான் ஆப்ரஹாம் ஒரு wooden flat face. அவனுக்கு நடிக்க வராது. ஆனாலும், நான் நடிகனை விட இயக்குநர்களை அதிகமாக நம்புகிறவன்.

  பின்னூட்டம் by Narain — ஜூலை 14, 2005 @ 8:12 முப

 9. நாராயணன்,
  ஷாபனா ஆஸ்மி மொட்டையோடு (முதல் படப்பிடிப்பில்) விதவையாக வரும் படங்கள் இருக்கின்றன. அவரது முக அமைப்பு அதற்கு மிகப் பொருத்தமாக இருக்கின்றது. ஷாபனா ஆஸ்மியின் முகத்தில் இயற்கையிலேயே ஒரு சோகம் வழிவதைப் நான் உணர்ந்திருக்கின்றேன். லிசா ரே எந்த அளவிற்கு இந்தப் பார்திரத்திற்குப் பொருந்துகின்றார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். நானும் உங்களைப் போல் இயக்குனரை நம்புகின்றவள்தான்.

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 14, 2005 @ 8:33 முப

 10. //ஒரு நல்ல இயக்குநரை இந்திய அரசியல் எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கும் என்பதற்கு தீபா சரியான உதாரணம்.//
  நரேன்,இது கொஞ்சம்(நல்ல இயக்குநர்) அதிகப்படியானதோ என்று எனக்குத் தோன்றுகின்றது. நான் பார்த்த தீபா மேத்தாவின் Fireம், Bollywood/Hollywoodம் அவரை நல்ல ஒரு இயக்குநனர் என்று எனக்கு அடையாளம் காட்டவில்லை. Earth-1947 பார்க்கவில்லை. கேள்விப்பட்டட்வரையில் தீபாமேத்தாவின் படங்களில் அதுதான் பரவாயில்லை என்று நம்புகின்றேன். மற்றபடி அவரது துணிச்சல் பாராட்டபடவேண்டிய விடயம்.

  பின்னூட்டம் by டிசே தமிழன் — ஜூலை 14, 2005 @ 8:54 முப

 11. டீ.சே மிகத் தரமான இயக்குனர் என்று தீபா மேத்தாவைக் கூற முடியாவிட்டாலும், இந்தியச் சினிமா உலகின் சினிமாவின் தரத்துடன் பார்க்கும் போது நிச்சயம் தீபா மேத்தா பாராட்டுக்குரியவர். வோர்ட்ர் திரைக்கதை நம்பிக்கை தருவதாகவே இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 14, 2005 @ 1:56 பிப

 12. நன்றிகள் கறுப்பி.
  ம்ம்..சூப்பரான பதிவு.
  water எடுத்த கதையும், தீபா மேத்தாவை பற்றிய விவரங்களையும் மிக நன்றாக சொல்லி இருக்கின்றீர்கள். தொடர்ந்து திரை உலகில் தனித்து நிற்பவர்கள் பற்றியும் நீங்கள் எழுத வேண்டும்.

  இப்போது, water படம் எடுத்து அதை வெளி விட முடியாத நிலைமை. மெக்தலீனா ஸிஸ்டர்ஸ் படம் போல இருக்கலாம் என ஒரு உணர்வு என்னுள். எனது ஆசிரியர் ஒருமுறை ஐரோப்பாவில் நடந்த மத மாச்சரியங்கள் இப்போது இந்தியாவில் நடக்கின்றன என்று கூறினார். அதாவது மேலே சொன்ன இரு படங்களும் அதை வேறு பாணியில் சொல்கின்றன என படுகின்றது.
  நன்றிகள்.

  பின்னூட்டம் by Balaji-Paari — ஜூலை 14, 2005 @ 6:16 பிப

 13. டிசே, நான் நல்ல இயக்குநர் என்று சொன்னது அவரின் துணிச்சலுக்கும், இந்திய சினிமா தொடாத தளங்களைத் தொட்டு படமெடுக்கும் விதத்தினையும் தான். கருத்து ரீதியாக பார்த்தால், ஒரு பெண் இயக்குநராய், பயர் போன்ற ஒரு படத்தினை அதுவும் இந்தியாவிலெடுப்பது என்பது என்னளவில் மிக துணிச்சலான விஷயமே.

  பின்னூட்டம் by Narain — ஜூலை 15, 2005 @ 9:43 முப

 14. Thanks Balaji-paari, see my latest post.
  Good bye. when you have the time e-mail me.
  thamilachi2003@yahoo.ca

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 15, 2005 @ 10:37 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: