கறுப்பி

ஜூலை 14, 2005

கொஞ்சம் நிற்போம்! சில நிமிடங்களேனும்.

Filed under: மற்றது — suya @ 7:19 முப

நான் சுவாசித்த காற்று இங்கும் வீசியிருக்கலாம்.
நான் பார்த்த நிலவு இங்கும் காய்ந்திருக்கலாம்.
என்னைச் சுட்ட சூரியன் இங்கும் உதித்திருக்கலாம்.
என்னை நனைத்த மழை இங்கும் பொழிந்திருக்கலாம் – ஆனால்
நான் பார்த்த பறவை இதுவல்லவே!

Advertisements

7 பின்னூட்டங்கள் »

 1. \என்னைச் சுட்ட கூ+ரியன் இங்கும் உதித்திருக்கலாம்.\

  கறுப்பி நல்லாயிருக்கு. கூரியனை சூரியன் ஆக்கிடுங்க

  பின்னூட்டம் by சினேகிதி — ஜூலை 14, 2005 @ 7:32 முப

 2. Done Snehithi. Thanks. (*_*)

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 14, 2005 @ 7:36 முப

 3. ம்ம்..என்னவோ செய்கின்றது. நன்றிகள் கறுப்பி

  பின்னூட்டம் by Balaji-Paari — ஜூலை 14, 2005 @ 6:06 பிப

 4. பாலாஜி,
  இந்தப் புகைப்படம் மிகப் பிரபல்யமானது என்பது தங்களுக்குத் தெரிந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்பு இந்தப் புகைப்படம் பற்றிய ஒரு விவரணப்படம் பார்த்தேன். சோமாலியாவில் என்று நினைக்கின்றேன். இயக்கம் இன்றி இருந்த குழந்தை ஒன்றை தூக்கிச் செல்ல ஒரு கழுகு காத்திருந்ததாகவும் கழுகையும் குழுந்தையையும் சேர்த்துப் புகைப்படம் எடுப்பதற்காக புகைப்பட நிருபர் (பெயரை மறந்து விட்டேன்) பல மணித்தியாலங்கள் மறைவில் காத்திருந்ததாகவும். புகைப்படம் எடுத்த பின்னர் அவர் என்ன செய்தார் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. அவர் புகைப்படத்தை எடுத்துத் தன்னைப் பிரபல்யமாக்கிக் கொண்டார். ஆனால் குழந்தை கழுகின் உணவாகிப் போனதா? என்று கேள்வி அந்த விவரணப்படத்தில் எழுப்பப்பட்டது. சோமாலியாவில் கழுகிற்கு குழந்தைகள் இரையாவது ஒன்றும் புதிதல்ல. நிருபர்களும் என்ன செய்வார்கள்.

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 15, 2005 @ 6:42 முப

 5. உந்தப் படத்தையெடுத்த நிருபர் பின் தற்கொலை செய்து கொண்டார்.
  குழந்தையைக் காப்பாற்றாமல் படமெடுக்க மினக்கெட்டவர் என்ற பழி அவர்மேல் சுமத்தப்பட்டது.
  இவர் பற்றின பதிவை தமிழில் தான் எங்கோ வாசித்தேன். மறந்துவிட்டேன்.

  பின்னூட்டம் by வன்னியன் — ஜூலை 15, 2005 @ 7:33 முப

 6. நன்றி வன்னியன், இந்தத் தகவல் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. இந்தப் படத்தை எடுத்தவரின் பெயர் தெரியுமா? மேலதிக தகவல்கள் அறிய ஆவலாக உள்ளது. நேற்று எனது நண்பர் ஒருவர் மின்அஞ்சலில் சில படங்களை எனக்கு அனுப்பியிருந்தார். அதற்குள் இந்தப்படமும் இருந்தது. பார்த்த போது பல மாதங்கள் முன் நான் பார்த்த விவரணப்படம் நினைவிற்கு வந்தது. ஆனால் தகவல்களை மறந்து போய் விட்டேன். அதனால்தான் புகைப்படத்தைப் பதிவில் போட்ட போது ஒன்றும் எழுதவில்லை. தகவல் தெரிந்தவர்கள் எழுதினால் அறிந்து கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். மீண்டும் நன்றி வன்னியன்.

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 15, 2005 @ 7:48 முப

 7. Hello pretty young lady,

  Here are some information that may be of interest to you.
  1. See: http://picturenet.co.za/photographers/kc/
  Kevin Carter (1961-1994) – South Africa Pulitzer Prize winner, Kevin Carter, took his own life months after winning the Pulitzer Prize for feature photography for a haunting Sudan famine picture. A free-lance photographer for Reuter and Sygma Photo NY and former PixEditor of the Mail&Gaurdian, Kevin dedicated his carrer to covering the ongoing conflict in his native South Africa. He was highly honoured by the prestigious Ilford Photo Press Awards on several occasions including News Picture of the Year 1993. Kevin is survived by a seven year old daughter, Megan.

  2. See also: http://www.thisisyesterday.com/ints/KCarter.html

  Hope these help.

  Regards,
  Dondu Raghavan

  பின்னூட்டம் by dondu(#4800161) — ஜூலை 19, 2005 @ 5:45 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: