கறுப்பி

ஒக்ரோபர் 25, 2005

பெண்கள் சந்திப்பும் விமர்சனங்களும்

Filed under: இலக்கியம் — suya @ 11:16 முப

பெண்கள் சந்திப்பு என்பது மாற்றுக் கருத்துக்களைத் தாங்கி வரும் பெண்களின் கருத்துப் பரிமாற்றம் என்பதுதான் என் கருத்தாக இருந்தது. ஆனால் லண்டனில் இடம் பெற்ற பெண்கள் சந்திப்பில் படிக்கப்பட்ட கட்டுரைக்கள் அனைத்தும் அப்படியாக இருக்கவில்லை. அத்தோடு நவஜோதி எனும் ஒரு பெண்ணின் கவிதைத் தொகுப்பும் வெளியிட்டார்கள். அந்தக் கவிதைத் தொகுப்பை விமர்சித்த பெண்ணின் விமர்சனம் சிறுபிள்ளைத் தனமாக அமைந்திருந்தது. ஒரு இந்திய பெண் மருத்துவரின் பேச்சும் இடம்பெற்றது. அதுவும் மிகவும் சாதாரணமான ஒரு பேச்சாகத்தான் அமைந்திருந்தது. மருத்துவக் குறிப்பம் குழந்தை வளர்ப்பும் பற்றி அறிந்து கொள்வதற்காக நான் கனடாவிலிருந்து லண்டனில் இடம்பெறும் பெண்கள் சந்திப்பிற்குச் செல்லவில்லை. இப்படியான நிகழ்வுகளை அனுமதித்தவர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்தான். இருந்தும் அதிகமான நிகழ்வுகள் மாற்றுக்கருத்துக்களைக் கொண்ட முற்போக்கான விடையங்களைத் தொட்டுச் சென்றது சந்தோஷமாகவே இருந்தது.

தேனியில் இடம்பெற்ற கட்டுரை வெறும் காழ்ப்புணர்வால் பெண்கள் சந்திப்பிற்கு வந்து சென்ற ஒருவரது பார்வையாகத்தான் எனக்குப் படுகின்றது. அவர் எதிர்பார்க்கும் வெறும் இந்தியமாதர் சங்கம் போன்ற ஒரு சந்திப்பாக இந்தப்பெண்கள் சந்திப்பு அமையாமல் மேலே பல படிகள் சென்று பெண்கள் தயக்கமின்றி சகலதையும் பேசியது அவருக்கு அருவருப்பாகவும் சங்கடமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு மாதர்சங்கத்தை அமைத்து நேரம் போகாமல் ஈயோட்டிக்கொண்டிருக்கும் பெண்களை இணைத்து அழகுக் குறிப்பும் சமையல் கலையும் கலாச்சாரம் காப்பது பற்றியும் கலந்துரையாடலாம்

பெண்கள் சந்திப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை இரண்டாம் நாள் ஒரு பெண் உள்ளே நுழைத்து இடம்பெற்றுக்கொண்டிருந்த பேச்சை இடஞ்சல் செய்யும் வகையில் ஆண்களை ஏன் அனுமதிக்கின்றீர்கள் இல்லை என்று காரசாரமாக வாதாடினார். அவருக்கான பதில் வழங்கப்பட்ட போதும் திருப்திப்படாமல் வெளியில் செல்வதும் திரும்ப வந்து மீண்டும் பேச்சை ஆரம்பிப்பதுமாக இருந்தார். அவரின் பேச்சை நிராகரித்து விட்டு நாங்கள் எமது நிகழ்வைத் தொடர்வோம் என்று எல்லோரும் கருத்துக் கூறி நிகழ்வைத் தொடர்ந்தார்கள். அன்று மாலை இளையஅப்துல்லாவின் துப்பாக்கிகளின் காலம் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்குப் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சில பெண்கள் சென்றிருந்தோம். அங்கு வந்திருந்த ஒரு ஆண் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு பெண்ணை பேச விடாமல் துரத்திவிட்டீர்களாம் என்று கேட்டார் சம்பவங்கள் எப்படித் திரிபு படுத்தப்படுகின்றன என்பதை நான் நேராகக் கண்டு திகைத்தேன். எடுத்து சொன்னால் அந்த ஆண் கேட்பதாக இல்லை.

சந்திப்பின் போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் மத்தியில் திடீரென்று இரண்டு அனாமதேய அறிக்கைகள் பெண்கள் சந்திப்பிற்கு எதிராக வைக்கப்பட்டிருந்தன. அது நிச்சயமாகப் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு பெண்ணினால்தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும். சந்திப்பில் கலந்து கொண்டு தேனீர் உணவருந்தி சந்திப்பை நடாத்துபவர்களைத் தூற்றி எப்படி இவ்வாறாக நாகரீகமற்ற முறையில் நடக்க முடிகின்றது புரியவில்லை.

ஒரு பெண் கேட்டார் இங்கே கூடிக்கதைக்கின்றீர்கள் புத்தகம் வெளியிடுகின்றீர்கள். இது உங்களுடன் முடிந்து விடப்போகின்றது. மற்றைய பெண்களுக்க இவை போய்ச் சேர்வதற்கான முயற்சிகள் நீங்கள் எடுப்பதில்லை என்று. சிறு கூட்டமாக ஆரம்பித்த பெண்கள் சந்திப்பில் உலகெங்கிலும் இருந்து பெண்கள் கலந்து கொள்கின்றார்கள். பெண்கள் சந்திப்பு மலரில் பல புதிய பெண்கள் எழுதுகின்றார்கள். இவை எப்படிச் சாத்தியமாயிற்று. வீடு வீடாகச் சென்று பெண்கள் சந்திப்பிற்க வாருங்கள் என்று கேட்பதற்கு பெண்கள் சந்திப்பில் சமையல் குறிப்புக் கொடுக்கப்படவில்லை. தேடல் உள்ள பெண்கள் பெண்கள் சந்திப்புபற்றி அறிந்து கொண்டு கலந்து கொள்வார்கள். மலர் பற்றித் தெரிந்து கொண்டு யாரிடமாவது பெற்றுப் படிப்பார்கள். இது தேடலும் ஆர்வமும் உள்ள பெண்களுக்கான தளம் மட்டுமே. பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்களுக்கான வேலைத் திட்டம் இதுவல்லை.

அடுத்து பெண்கள் சந்திப்பு மலர் தரமற்றதாக இருக்கின்றது என்றும். தணிக்கை முறையில் தரமான படைப்புக்களை மட்டும் பிரசுரிக்க வேண்டும் என்ற அறிக்கையும் விடப்பட்டது. எழுதும் பெண்களின் தொகை மிக மிகக் குறைவாக உள்ளது. தற்போது பல புதிய பெண்கள் எழுத ஆரம்பித்துள்ளார்கள். எழுதும் ஆர்வம் வரும் போது, அவர்கள் வாசிப்பு ஆர்வமும் அதிகரிக்கும். இவர்களை ஊக்குவிக்கு முகமாக இவர்களது படைப்புக்கள் பிரசுரிக்கப்படல் வேண்டும் என்ற பலர் கேட்டுக்கொண்டதன் பேரில் எழுத்தில் ஆர்வம் கொண்டு அரசியல் சார்பற்ற எந்தப் படைப்பும் பிரசுரிக்கப்படல் வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

அவதூறான விமர்சனங்களை அசட்டை செய்து விட்டுப் பெண்கள் சந்திப்பு இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாகத் தொடரும் என்பது இயங்கிக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்தபோது நான் புரிந்து கொண்டது.

Advertisements

18 பின்னூட்டங்கள் »

 1. கறுப்பி,
  சென்றவர் ஒருவரே நிகழ்ந்த விபரங்களைத் தரும்போது, போகாதவர்கள் எழுதிய குறிப்புகளிலும்விட அறிவதற்கு அதிகமாக விடயங்கள் கிடைக்கின்றன.

  பின்னூட்டம் by -/பெயரிலி. — ஒக்ரோபர் 25, 2005 @ 12:13 பிப

 2. நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் எழுத்துக்களை படிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. பெண்கள் என்றாலே பல வார இதழ்களில் குழந்தை வளர்ப்பு, சமையல் அழகு குறிப்புகளை தாண்டி எதுவும் இல்லை. மாறி இருப்பவையும் கடைசியில் இத்தனைக்கும் இவர்தான் வீட்டு வேலைகளை கவனைத்து கொள்கிறார், புடவை கட்டி கொள்கிறார், கணவனை கவனித்து கொள்கிறார் என்ற ரீதியில் இருக்கும் போது பெண்கள் சந்திப்பும் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது.

  பின்னூட்டம் by தேன் துளி — ஒக்ரோபர் 25, 2005 @ 12:36 பிப

 3. கறுப்பி மீண்டும் வலைப்பதிவது குறித்து மகிழ்ச்சி.

  சென்ற பதிவில், ஆனந்தியைக் கொஞ்சம் அதிகமாகவே போட்டுத் தாக்கியிருப்பதாகப் படுகிறது.
  ஆனால் இது தற்செயலாகவும் இருக்கலாம். தலைக்கு 10 அல்லது 15 நிமிடம் என்று நேரம் வகுத்து நிகழ்த்தினால் இந்தமாதிரி இடைஞ்சல்கள் வராது. எனக்கு ஆனந்தியினதோ ராஜேஸ்வரியினதோ நிலைப்பாடுகள் பற்றி எதுவும் தெரியாது என்பது உபரித் தகவல்.

  பின்னூட்டம் by karthikramas — ஒக்ரோபர் 25, 2005 @ 1:11 பிப

 4. கதிர்காமரு ஏன் ஆனந்தியைப் போட்டுத் தாக்கியதாகப் பார்க்கின்றீர்கள். ஒரு நிகழ்வில் நடந்தவற்றை நான் எழுதியிருந்தேன். பெண்கள் சந்திப்பிற்கு அவர் வரவில்லை. ஆனால் அங்கு அப்படி இப்படி நடந்ததாம் என்று சந்திப்பிற்குச் சென்ற என்னிடம்; அவர் விமர்சனம் செய்தது எனக்கு சங்கடமாக இருந்தது. கதைகள் எப்படித் திரிவு படுகின்றன என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன். ஆங்கிலத்தில் தொடர்ச்சியாகப் உரையாடும் ஒருவர் சிறுவர்கள் தமிழில் உரையாட வேண்டும் என்ற வாதாடியதும் சங்கடமான சமையல்தான் எனக்கு..
  அடுத்து பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய எழுத்தாளர் திலகபாமாவுடன் எற்கனவே எனக்குக் கருத்தில் மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதே கருத்து மோதல்கள் லண்டனிலும் தொடர்ந்தது. நிகழ்வின் முடிவில் அவருடன் நின்று நான் படங்கள் எடுத்தேன். விடை பெறும் போது திலகபாமா என்னிடம் கூறினார் இந்தியாவில் என்றால் ஒரு கருத்து வேறுபாடு வரும் போது முகத்தைத் திருப்பிச் சென்று விடுகின்றார்கள். கருத்து வேறுபாடு இலக்கியத்தில் எமக்கிருந்தாலும் முகம் தூக்கிக் கொள்ளாமல் பேசி விலகும் ஈழப்பெண்களின் நட்பு தனக்குப் பிடித்திருக்கின்றது என்றார்.

  பின்னூட்டம் by கறுப்பி — ஒக்ரோபர் 25, 2005 @ 2:41 பிப

 5. “இருந்தும் அதிகமான நிகழ்வுகள் மாற்றுக்கருத்துக்களைக் கொண்ட முற்போக்கான விடையங்களைத் தொட்டுச் சென்றது சந்தோஷமாகவே இருந்தது. ”

  “அரசியல் சார்பற்ற எந்தப் படைப்பும் பிரசுரிக்கப்படல் வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. ”

  ம் . . .

  எங்க போய் முடியப் போகுதோ?

  பின்னூட்டம் by sirumi — ஒக்ரோபர் 25, 2005 @ 6:06 பிப

 6. இந்தப்பக்கம் ஆண்களுக்கு இடமுண்டா!
  இதுபோல் தமிழ்நாட்டிலும் கூட்டம்
  நடத்தி பெண் மேம்பாட்டிற்கென அமைப்புக்கள் தொடங்களாம்.

  பின்னூட்டம் by சித்தன் — ஒக்ரோபர் 25, 2005 @ 8:40 பிப

 7. Sirumi

  எங்க போய் முடியப் போகுதோ???????

  பின்னூட்டம் by கறுப்பி — ஒக்ரோபர் 26, 2005 @ 3:09 முப

 8. கதிர்காமரு
  why you have transformed the young cherrymas into an old person 🙂

  பின்னூட்டம் by ravi srinivas — ஒக்ரோபர் 26, 2005 @ 3:43 முப

 9. as i have not read any of the publications arising out of those
  meetings i have no idea about the diverese views or opinions expressed.from what i have read in web it is not easy to get a clear understanding on the views expressed in the meetings.so i dont
  have much to say.

  பின்னூட்டம் by ravi srinivas — ஒக்ரோபர் 26, 2005 @ 3:45 முப

 10. Hi Sumathi,
  I had just left a message in ur mail id as well.
  am leena manimekalai, right now touring US, trying to get n touch with u.Can u please respond to me in my id leenaraghu@yahoo.co.uk
  thanks and cheers
  leena

  பின்னூட்டம் by Manimekalai — ஒக்ரோபர் 30, 2005 @ 3:05 பிப

 11. கறுப்பி, அவரிடம் blogger கணக்கு இல்லாத படியினால், பத்மநாப ஐயர் இந்தப்பின்னூட்டத்தினை உங்களின் இந்தப்பதிவிலே இடும்படி அனுப்பியிருந்தார்.

  ————–பத்மநாப ஐயரின் பின்னூட்டம்–
  சந்திப்பின்போது பெருமளவில் தமிழில்தான் பேசப்பட்டது என்பதுதான்
  உண்மை. ஓவியர் ராஜாவிடமும் தொலைபேசியில் கேட்டு உறுதிப்
  படுத்திக்கொண்டுதான் இதனைப்
  பததிவுசெய்கிறேன். கறுப்பி, பாவம், Jet
  lagல் மறந்துபோயிருக்கலாம்.
  —————-முடிவு———————–

  பின்னூட்டம் by -/பெயரிலி. — ஒக்ரோபர் 31, 2005 @ 9:02 முப

 12. Peyarili,

  I think you didn’t get it right. I mentioned that when Ananthy talked about how our ppl are always talking in Eng. blah blah blah they shoud be talking in tamil she only said all these in english. but the meeting is about Short films.
  Rajah talked to me as well and told me that he is realy glad that I put the end of the stupid arguement.

  Joseph invited me for dinner to discussed about short film. I don’t know If Ananthy has something to do with it or not. but I wasn’t ready to discuss about LTTE or Tamil Valarpu.
  Peyarily you better call Iyer and Rajah and ask them in what langue Ananthy had discussed most of these matters. I didn’t write that Rajsh or Iyer used English or even other ppl at that meeting.you better read my post again.

  Kuddaiyila Maddaiya Pooddu Kulapathem

  பின்னூட்டம் by கறுப்பி — ஒக்ரோபர் 31, 2005 @ 11:04 முப

 13. கறுப்பி,

  I think you are the one NOT reading the lines straight. If you look and read what I posted FOR Iyer carefully you would find that /peyarili. I did not make any comment. I was not there; then why and how could I have made to make any comment about what happened in a land that I never visited in my life 😉

  you better read the comment that I posted FOR iyer again ;-))

  பின்னூட்டம் by -/பெயரிலி. — ஒக்ரோபர் 31, 2005 @ 11:34 முப

 14. This post has been removed by the author.

  பின்னூட்டம் by கறுப்பி — ஒக்ரோபர் 31, 2005 @ 11:50 முப

 15. O.K Peyarily,
  I will give a call to Iyer and talk to him about it. I don’t want any misunderstanding. I wasn’t talking to Iyer or Rajah at the meeting. coz I spend whole day with them. ( I was bored (*_*), and we talked enough I hope. So I was taking to Ananthy.. then got bored and mad.. move around and talked to other ppl. Illaiya Abdulla (a cute guy (*_*),

  may be Ananthy did talk to Iyer in tamil.

  hey I want to go back to London again. don’t put me into trobles.

  31 October, 2005

  பின்னூட்டம் by கறுப்பி — ஒக்ரோபர் 31, 2005 @ 11:51 முப

 16. /
  hey I want to go back to London again. don’t put me into trobles. /
  Oh OH!! All my pain is for making the troubles happen to you. Sorry I can not give any word ;-)))

  பின்னூட்டம் by -/பெயரிலி. — ஒக்ரோபர் 31, 2005 @ 11:57 முப

 17. ENNAVANALUM SANTHOSAMAKA IRUPPOME

  பின்னூட்டம் by ubanisha — நவம்பர் 6, 2005 @ 7:48 முப

 18. ENNA ANALUM SANTHOSAMAKA IRUPPOME

  பின்னூட்டம் by ubanisha — நவம்பர் 6, 2005 @ 7:49 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: